Home Tamil செட்டிநாடு பப்பாளி குருமா

செட்டிநாடு பப்பாளி குருமா

0 comments
Published under: Tamil

ஒரு ருசியான மற்றும் எளிய செட்டிநாடு பாணி பப்பாளி குழம்பு.  ஒரு சைட் டிஷ் போன்று பரிமாறவும்.
Papaya

தேவையான பொருட்கள்

பப்பாளி காய் – அரை கப் (நறுக்கியது)

எண்ணெய் – இரண்டு குழிகரண்டி

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

அண்ணாச்சிபூ – ஒன்று

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

சோம்பு தூள் – ஒரு டீஸ்பூன்

சீரக தூள் – ஒரு டீஸ்பூன்

தனியா தூள்- இரண்டு டீஸ்பூன்

தேங்காய் பால் – ஒரு டம்ளர்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், அண்ணாச்சிபூ, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பின், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பப்பாளி காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, கரிவேபில்லை சேர்த்து கிளறவும்.

பின், மஞ்சள் தூள், சோம்பு தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பின், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Leave a Comment