Home Tamil வெந்தயக் கீரை கோப்தா கறி

வெந்தயக் கீரை கோப்தா கறி

0 comment
Published under: Tamil

Vendhaya Keerai / Methi

தேவையான பொருட்கள்

கோப்தா செய்வதற்கு

வெந்தயக் கீரை – 2  – 3 கட்டு

கட்டித் தயிர் – 3/4 கப்

மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி

கடலை மாவு – 1 கப்

ஓமம் – 1/4 தேக்கரண்டி

கடைந்த பாலேடு – 2 மேசைக்கரண்டி (அலங்கரிக்க)

எண்ணெய் – பொரிப்பதற்கு

உப்பு – தேவைக்கேற்ப

அரைத்துக் கொள்ளவும்

வெங்காயம் – 2

தக்காளி – 3

இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு

பச்சை மிளகாய் – 2

சர்க்கரை – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி

தனியாப் பொடி – 1 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் – 3/4 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடலை மாவு, உப்பு.

இவற்றை தயிருடன் கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் ஓமம், வெந்தயக்கீரை இவற்றைப் போட்டு வதக்கவும்.

சிறிது வதங்கிய பிறகு கரைத்த மாவை அதனுடன் சேர்க்கவும்.

கிரேவி  கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வைக்கவும்.

பின்பு இறக்கவும்.

சூடு ஆறிய பின் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து சிறிய உருண்டைகளாக்கவும்.

சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

கறி செய்யும் முறை ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

கோப்தாவை தட்டில் வைத்து  அதன் மேல் குழம்பை ஊற்றவும்.

துருவிய சீஸ், கொத்தமல்லித்தழை, கடைந்த பாலேடு, ஆகியவற்றை மேலே அலங்கரித்து சூடாக பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter