ஃப்ரூட் மிக்ஸர்

Tamil 0 comments

ஃப்ரூட் மிக்ஸர் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு கோடை கால குளிர்பானம். எலுமிச்சை பழம் ஜூஸ், கரும்பு ஜூஸ், மற்றும் தர்பூசணி ஜூஸ்க்கு அடுத்து தமிழகத்தில் கோடை காலங்களில் அதிகமாக மக்கள் பருகும் பழச்சாறு ஃப்ரூட் மிக்ஸர் தான். ஃப்ரூட் மிக்ஸர்க்கு என்று தமிழகத்தில் ஒரு கூட்டமே உண்டு என்றால் அது மிகையல்ல. அதனாலேயே தமிழகத்தில் ஃப்ரூட் மிக்ஸர் ஜூஸ் இல்லாத ஜூஸ் கடைகளை நாம் காண்பதே மிகவும் அரிது.

fruit mixer - ஃப்ரூட் மிக்ஸர்
image via YouTube

பொதுவாக நாம் தனி தனியாக பலவிதமான பழங்களை ஜூஸ் ஆக்கி பருகி இருப்போம். ஆனால் பல விதமான பழங்களை ஒன்றாக போட்டு நாம் செய்யும் ஒரு குளிர்பானம் அது ஃப்ரூட் மிக்ஸர் ஜூஸ் தான். அதனால் இவை உடம்புக்கு மிகவும் குளிர்ச்சியானது மற்றும் சத்தானதும் கூட. ஃப்ரூட் மிக்ஸர்ரை நாம் வீட்டிலேயே மொத்த பழ சாறுகளை செய்வது போன்றே மிக எளிதாக கடைகளில் கிடைப்பதை விட சுகாதாரமான முறையில் செய்து விடலாம்.

இப்பொழுது கீழே ஃப்ரூட் மிக்ஸர் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

fruit mixer 380x380 - ஃப்ரூட் மிக்ஸர்
0 from 0 votes

ஃப்ரூட் மிக்ஸர் ரெசிபி

பல விதமான பழங்களை ஒன்றாக போட்டு நாம் செய்யும் ஒரு குளிர்பானம் அது ஃப்ரூட் மிக்ஸர் ஜூஸ் தான்.
Prep Time20 mins
Cook Time20 mins
Total Time40 mins
Course: Dessert, Drinks
Cuisine: South Indian, Tamil Nadu

ஃப்ரூட் மிக்ஸர் செய்ய தேவையான பொருட்கள்

 • 3 வாழைப்பழம்
 • 1 சப்போட்டா பழம்
 • ½ தர்பூசணி பழம்
 • ¼ கப் பப்பாளி பழம்
 • ¼ கப் மாதுளை பழம்
 • ½ கப் மாம்பழம்
 • ½ கப் அண்ணாச்சி பழம்
 • 10 -12 கிரேப்ஸ்
 • 4 - 6 பேரீச்சம் பழம்
 • தேவையான அளவு சர்க்கரை
 • தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்
 • ¼ மேஜைக்கரண்டி ஆரஞ்சு சிரப்

ஃப்ரூட் மிக்ஸர் செய்முறை

 • முதலில் வாழைப்பழம், அண்ணாச்சி பழம், மாதுளம் பழம், பப்பாளி பழம், மாம்பழம், சப்போட்டா பழம், மற்றும் தர்பூசணி பழத்தை துண்டுகளாக்கி மற்றும் பேரிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரையை நன்கு கரைத்து விடவும்.
 • சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.
 • பின்பு சிறிதளவு தண்ணீரை சுட வைத்து அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை ஊற விட்டு அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
 • பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தர்பூசணி பழத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
 • பிறகு அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும். (வேண்டுமென்றால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)
 • அடுத்து ஒரு bowl ஐ எடுத்து அதில் முதலில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பழத்தை போட்டு அதை நன்கு மசித்து விடவும்.
 • பின்பு அதில் நாம் துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் பப்பாளி பழம், மாம்பழம், சப்போட்டா பழம், மற்றும் நாம் சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழத்தை போட்டு அதை நன்கு மசித்து விடவும்.
 • பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அண்ணாச்சி பழம், மாதுளம் பழம், மற்றும் திராட்சையை போட்டு அதை லேசாக மசித்து விடவும்.
 • இப்பொழுது அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து அதனுடன் ஆரஞ்சு சிரப்பையும் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (கலர் சிரப்பை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)
 • அடுத்து இதில் நாம் செய்து வைத்திருக்கும் தர்பூசணி பழச்சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (தர்பூசணி பழச்சாறை விரும்பாதவர்கள் வெறும் தண்ணியை சேர்த்து கொள்ளலாம்.)
 • பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ் க்யூப்ஸை போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் ஃப்ரூட் மிக்ஸர் ஊற்றி அதை சில்லென்று பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான ஃப்ரூட் மிக்ஸர் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*