ரசகுல்லா

By Praveen Kumar
இந்தியாவில் பிரசித்தி வாய்ந்த ஒரு இனிப்பு வகை தான் ரசகுல்லா.

இனிப்புகள் என்றாலே பொதுவாக உணவுப் பிரியர்களுக்கு மட்டும் அன்றி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக சில இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி. அந்தப் பிரசித்தி வாய்ந்த ஒரு இனிப்பு வகை தான் ரசகுல்லா. இவை கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் உதயமானது என்று ஒரு சாராரும். இது ஒடிசாவில் உதயமானது என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள்.

Rasgulla

இப்போது கீழே ரசகுல்லா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Rasgulla
5 from 1 vote

ரசகுல்லா

இந்தியாவில் பிரசித்தி வாய்ந்த ஒரு இனிப்பு வகை தான் ரசகுல்லா.
Course: Dessert
Cuisine: Indian, North Indian
Keyword: rasgulla

Ingredients

  • 1 lire பால்
  • 1 1/2 கப் சர்க்கரை
  • 1 எலுமிச்சம் பழம்
  • 1 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
  • பிஸ்தா தேவையான அளவு
  • பாதாம் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தை high flame இல் அடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் பாலை ஊத்தி சுட வைக்கவும். (பால் சுடும் வரை அதன் மேலே ஆடையைக் கட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அவ்வப்போது பாலை கிண்டி விடவும்.)
  • இப்பொழுது ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டு துண்டாக நறுக்கி அதன் சாறை எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பால் கொதித்து பொங்கும் போது அதில் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு பன்னீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் வந்து விடும்.
  • இப்போது அடுப்பில் இருந்து இறக்கி ஒரு வடிகட்டி மூலம் தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரித்துக் கொள்ளவும்.
  • பின்பு பன்னீரில் 2 அல்லது 3 முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி மீண்டும் பில்டர் செய்து கொள்ளவும். (இவ்வாறு தண்ணீரை விட்டுக் கழுவினால் தான் பன்னீரில் உள்ள எலுமிச்சை வாசம் நீங்கும்.)
  • அடுத்து இந்த பன்னீரை ஒரு பருத்தி துணியில் போட்டு நன்கு இறுக்கி இதில் இருக்கும் தண்ணீரை முழுமையாக எடுத்து விட வேண்டும்.
  • பின்னர் துணியை மீண்டும் இறுக்கமாக ஆக்கி மீதமுள்ள ஈரப்பதமும் போவதற்கு ஒரு பாத்திரத்தின் மீது பில்டரை போட்டு அதன் மீது இதை வைத்து விடவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் அளவிற்கு சர்க்கரையை போட்டு 6 கப் அளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கி விடவும்.
  • இப்பொழுது துணியில் கட்டி வைத்திருக்கும் பன்னீரை எடுத்து ஒரு தட்டில் போட்டு அதை சப்பாத்தி மாவு பதம் வரும் அளவிற்கு பிசைந்து கொள்ளவும். (5 இருந்து 6 நிமிடம் வரை பிசைய வேண்டும்.)
  • சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக மெதுவாக பக்குவமாக பிடித்து வைத்துக் கொள்ளவும். (அழுத்தி பிசைந்தால் சர்க்கரை பாகில் போடும் போது உருண்டை உடைந்து விடும்.)
  • அடுத்து அடுப்பில் இருக்கும் சர்க்கரை பாகை எடுத்து பில்டர் செய்து மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • சர்க்கரை பாகு கொதித்ததும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை பாகில் இறக்கி விட்டு அவ்வப்போது மெதுவாக அதை திருப்பி விடவும்.
  • ரசகுல்லா உருண்டைகளைப் போட்டு முதல் ஐந்து நிமிடத்திற்கு அல்லது உருண்டை நன்கு பெரிதாக ஊதும் வரை அடுப்பை ஏற்றி வைத்துக் கொள்ளவும்.
  • உருண்டைகள் வெந்ததும் அடுப்பை குறைத்து வைத்து பாத்திரத்தின் மேலே ஒரு மூடியை போட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அப்படியே வைக்கவும். (அவ்வப்போது திறந்து இதை கிண்டி விடவும்.)
  • 15 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூள் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
  • சுமார் 6 லிருந்து 7 மணி நேரத்திற்குப் பிறகு இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேலே துருவிய பிஸ்தா மற்றும் பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் சுவையான ரசகுல்லா தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

Sign up for our newsletter

Newsletter

Add Awesome Cuisine as a Preferred Source

Add Awesome Cuisine as Preferred Source on Google

Rasgulla Recipe in English

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment