மட்டன் பிரியாணி

Tamil 0 comments

பிரியாணி என்றாலே அதற்கு உலகம் முழுவதும் தனி மவுசு தான். குறிப்பாக ஆசிய கண்டத்தில் இதனின் மவுசு வேற லெவல் என்று சொல்லலாம். இளைஞர்களின் டாப் சாய்ஸ் உணவுகளிலும் பிரியாணி முதலிடத்தை பிடிக்கிறது. உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி இவை அனைவருக்கும் பிடித்தமான ஒரு அசைவ உணவாக இருக்கின்றது. இவை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய உணவு. இவை அவர்களின் பண்டிகை கால விருந்து மற்றும் இல்லத் திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

mutton biryani 1024x576 - மட்டன் பிரியாணி

பிரியாணி அதனின் சுவைக்கு ஏற்பவே மிகவும் சுவாரசியமான வரலாற்றைக் கொண்டவை. இவை ஈரானில் (தற்போது Persia) உதயமாகி பின்னர் முகலாய படையெடுப்பின் போது இந்தியாவுக்கு வந்த ஒரு உணவு என்று பல வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது முகலாய படையெடுப்புக்கு முன்னதாகவே தமிழகத்தில் ‘ஓண்ணு சோறு’ என்ற பெயரில் அரிசி, நெய், மாமிசம், மஞ்சள் தூள், கொத்தமல்லி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து செய்யப்பட்டு அது போர் வீரர்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டதாகவும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

பிரியாணி செய்வதற்கு சிறிது அதிக நேரம் எடுப்பதால் இதைப் பெரும்பாலும் ரெஸ்டாரன்ட்களில் அல்லது வீட்டுக்கே ஆர்டர் செய்து உண்கிறார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும் என்று. இப்பொழுது கீழே சுவையான மட்டன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

mutton biryani 380x380 - மட்டன் பிரியாணி
0 from 0 votes

மட்டன் பிரியாணி Recipe

பிரியாணி , உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான ஒரு அசைவ உணவாக இருக்கின்றது.
Course: Main Course
Cuisine: South Indian
Keyword: Biryani, mutton

Ingredients for மட்டன் பிரியாணி

 • 500 கிராம் பாசுமதி அரிசி
 • 500 கிராம் மட்டன்
 • 2 பெரிய வெங்காயம்
 • 2 தக்காளி
 • 1/2 கப் தயிர்
 • 4 to 5 பச்சை மிளகாய்
 • 1 மேஜைக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
 • 1 மேஜைக்கரண்டி பூண்டு பேஸ்ட்
 • 4 பிரியாணி இலை
 • 1 மேஜைக்கரண்டி சீரகம்
 • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
 • 7 கிராம்பு
 • 3 ஏலக்காய்
 • 1/2 மேஜைக்கரண்டி சோம்பு
 • 1/2 மேஜைக்கரண்டி மிளகு
 • மிளகாய்த்தூள் தேவையான அளவு
 • 2 பட்டை
 • 2 நட்சத்திர பூ
 • 2 மேஜைக்கரண்டி மல்லி
 • 1 ஜாதிபத்திரி
 • எண்ணெய் தேவையான அளவு
 • நெய் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு
 • கொத்தமல்லி ஒரு கை
 • புதினா ஒரு கை

How to make மட்டன் பிரியாணி

 • முதலில் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஜாதிபத்திரி, நட்சத்திர பூ, பட்டை, 5 கிராம்பு, ஒரு ஏலக்காய், சீரகம், மிளகு, சோம்பு, 2 பிரியாணி இலை மற்றும் தனியாவை ஒன்றாக சேர்த்து சுமார் 3 நிமிடம் வரை வறுக்கவும்.
 • இவை சிறிது நிறம் மாறியதும் அதை மிக்சியில் போட்டு நன்கு நைசாக தூள் செய்து கொள்ளவும்.
 • இப்பொழுது குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி சுட வைக்கவும்.
 • எண்ணெய் சிறிது சுட்டதும் அதில் 2 பிரியாணி இலை, 2 ஏலக்காய், 2 கிராம்பு, தேவையான அளவு உப்பு மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்நிறம் வரும் அளவிற்கு வதக்கவும்.
 • வெங்காயம் பொன்னிறமானதும் அதில் 4 அல்லது 5 பச்சை மிளகாய், ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சைவாசம் போகும் வரை வதக்கவும்.
 • பின்பு அதில் மஞ்சள் தூள், அவர் அவர் விருப்பத்துக்கு ஏற்ப மிளகாய்த்தூள், மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாதூளை சேர்த்து நன்கு கிளறவும்.
 • அடுத்து அதில் சிறிது அளவு கொத்தமல்லி, மற்றும் ஒரு கை அளவு புதினா சேர்த்து ஒரு கிளறு கிளறி பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
 • பின்னர் அதில் அரை கப் அளவு தயிர் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதில் மட்டனை போட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சரியாக 4 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வைக்கவும். (இளம் கறியாக இருந்தால் 4 விசிலும் சிறிது முத்துன கறியாக இருந்தால் 6 விசிலும் வைக்க வேண்டும்.)
 • 4 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து மட்டன் வெந்ததை உறுதி செய்த பின் அதில் பாசுமதி அரிசியை போட்டு மீண்டும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும். 3 நிமிடத்திற்கு பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்து விட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை குக்கரை திறக்காமல் அப்படியே வைக்கவும்.
 • 15 நிமிடங்களுக்கு பிறகு குக்கரை திறந்தால் உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் பிரியாணி தயார். இப்பொழுது இதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன் மேலே சிறிது கொத்தமல்லி தூவி ரைத்தா உடன் பரிமாறலாம்.
 • இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Get the recipe for Mutton Biryani in English

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*