Home Tamil சிக்கன் சால்னா

சிக்கன் சால்னா

Published: Last Updated on 0 comment
Published under: Tamil

chicken salna

தேவையான பொருட்கள்

சிக்கன் எலும்பில்லாதது / மட்டன் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 1

கறிவேப்பிலை- 10 இலைகள்

மல்லித்தழை – 1/4 கட்டு

பிரியாணி இலை – 1

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2

சீரகம் – 1/4 தேக்கரண்டி

சோம்பு – 1/4 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி

எலுமிச்சம்பழச்சாறு – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்

அரைக்க

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

மிளகு – 1 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

துருவிய தேங்காய் – 1/4 கப்

செய்முறை

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி,1/2 தேக்கரண்டி உப்பு, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும்.

மல்லித்தழை தூவி இட்லி, தோசை, இடியாப்பம், பிரியாணி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்

Recipe in English

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter