Home Tamil முள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா

முள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா

1 comment
Published under: Tamil
காலைநேர டிபன்கலுக்கு முள்ளங்கி பராத்தா ஒரு அருமையான மாற்று

முள்ளங்கி பராத்தா வட இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு டிபன் வகை. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். முள்ளங்கி பராத்தா பஞ்சாபியர்களின் பாரம்பரியமான உணவும் கூட. பஞ்சாப் மாநிலத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வட இந்தியா முழுவதும் பிரபலமடைந்தது. இந்தியா மட்டுமின்றி பஞ்சாபியர்கள் குடியேறியுள்ள பல ஐரோப்பிய நாடுகளிலும் முள்ளங்கி பராத்தா பிரபலமடைந்து உள்ளது.

முள்ளங்கி பராத்தா நாம் வழக்கமாக செய்து உண்ணும் சப்பாத்தியின் அதே செய்முறை தான். ஆனால் என்ன அதனுடன் கூடுதலாக நாம் இதில் முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து செய்கின்றோம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் காலை நேர டிபன்கலுக்கு முள்ளங்கி பராத்தா ஒரு அருமையான மாற்று. அது மட்டுமின்றி இதை நம் குழந்தைகளும் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.

முள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா / Mullangi Paratha with Tomato Raita

முள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா / Mullangi Paratha

இப்பொழுது கீழே முள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Mooli Paratha
5 from 1 vote

முள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா

காலைநேர டிபன்கலுக்கு முள்ளங்கி பராத்தா ஒரு அருமையான மாற்று
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Breakfast, Main Course
Cuisine: Indian
Keyword: mooli paratha, mullangi paratha

தேவையான பொருட்கள்

  • 2 கப் கோதுமை மாவு
  • 1 கப் தயிர்
  • 4 முள்ளங்கி
  • 1 தக்காளி
  • 1 உருளைக்கிழங்கு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  • 1 மேஜைக்கரண்டி கடலை மாவு
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ மேஜைக்கரண்டி சீரகம்
  • ½ மேஜைக்கரண்டி பெருங்காயம்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • ¼ மேஜைக்கரண்டி சாட் மசாலா
  • ½ மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் தக்காளியை நறுக்கி, முள்ளங்கியை துருவி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து நாம் துருவி வைத்திருக்கும் முள்ளங்கியை ஒரு bowl ல் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு ஒரு சுத்தமான துணியை எடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் முள்ளங்கியை போட்டு அதை நன்கு இறுக்கி பிடித்து முள்ளங்கியில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக ஒரு பாத்திரத்தில் பிழிந்து, முள்ளங்கி சக்கையை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.
  • இப்பொழுது 2 கப் அளவு கோதுமை மாவை எடுத்து அதை ஒரு bowl ல் கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து கொள்ளவும்.
  • அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து மீண்டும் அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவை சுமார் 6 லிருந்து 5 நிமிடம் வரை நன்கு பிசைந்து கொள்ளவும். (மாவு நன்கு மிருதுவான பதம் வரும் வரை அதை பிசையவும். நாம் முள்ளங்கியில் இருந்து பிழிந்து வைத்திருக்கும் தண்ணீரை இதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
  • மாவு தொட்டால் கைகளில் ஒட்டக்கூடாது அப்படி ஓட்டினால் அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அதனால் அதில் சிறிதளவு மாவை தூவி பிசைந்து கொள்ளவும்.
  • மாவை பிசைந்து முடித்ததும் அதன் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விடவும்.
  • பின்னர் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் பெருங்காயம், நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • இஞ்சியின் பச்சை வாசம் போனதும் அதில் கடலை மாவை போட்டு நன்கு கலந்து விட்டு கடலை மாவின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • கடலை மாவின் பச்சை வாசம் போனதும் அதில் கரம் மசாலா, அம்ச்சூர் தூள், மஞ்சள் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் துருவி வைத்திருக்கும் முள்ளங்கி மற்றும் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கலந்து அதில் சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை போட்டு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  • பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் தயிரை ஊற்றி அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, ஒரு பச்சை மிளகாய், கொத்தமல்லி, சாட் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கோதுமை மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து நாம் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்திருக்கும் கோதுமை மாவை எடுத்து கைகளில் வைத்து தட்டி அதை கிண்ணத்தில் இருக்கும் கோதுமை மாவில் இரு புறமும் போட்டு எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து புறங்களிலும் சமமாக தேய்க்கவும்.
  • பின்னர் அதில் நாம் செய்து வைத்திருக்கும் முள்ளங்கி கலவையை வைத்து அதை அனைத்து புறங்களிலும் இருந்து மடித்து உருண்டையாக உருட்டி மீண்டும் சப்பாத்தி கல்லில் வைத்து பக்குவமாக அதை தேய்க்கவும்.
  • இவ்வாறு மீதமுள்ள உருண்டைகளையும் தேய்த்து தயாராக ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு சப்பாத்தி கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • பின்னர் எண்ணெய் சுட்டதும் அதை கல்லில் பக்குவமாக போட்டு 15 லிருந்து 20 வினாடிகள் வரை வேக விட்ட பின் அதை திருப்பி போட்டு மீண்டும் ஒரு 15 லிருந்து 20 வினாடி வரை வேக விடவும்.
  • பிறகு அதை மீண்டும் திருப்பி போட்டு முள்ளங்கி பராத்தா நன்கு வேகும் வரை அதை வேக விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறே மீதமுள்ள அனைத்து முள்ளங்கி பராத்தாக்களையும் போட்டு எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து நாம் செய்த வைத்திருக்கும் தக்காளி ரைத்தாவுடன் சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முள்ளங்கி பராத்தா மற்றும் தக்காளி ரைத்தா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

செய்முறை வீடியோ

1 comment

Avatar of LATHA
LATHA August 11, 2021 - 12:53 pm

NICE

Reply

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter