ரசமலாய்

Tamil 0 comments

இனிப்புகளில் ரசகுல்லா விற்கு இனிப்பு பிரியர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதை விட ரசமலாய்க்கு பல மடங்கு மவுசு உண்டு. ரசகுல்லாவும் ரசமலாய்யும் ஏறத்தாழ ஒரே செய்முறையை கொண்டவைதான். ஆனால் சர்க்கரை தண்ணீருக்கு பதிலாக ரசமலாயை ராப்ரியில் ஊர விடுகிறார்கள். இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் உதயமானது என்று ஒரு சாராரும். இது ஒடிசாவில் உதயமானது என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். இவை இந்தியா மட்டுமின்றி வங்க தேசம் மற்றும் பாக்கிஸ்தானிலும் பிரபலமடைந்து இருக்கிறது.

rasmalai - ரசமலாய்

இப்போது கீழே ரசமலாய் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

rasmalai 380x380 - ரசமலாய்
0 from 0 votes

ரசமலாய் Recipe

இனிப்புகளில் ரசகுல்லா விற்கு இனிப்பு பிரியர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதை விட ரசமலாய்க்கு பல மடங்கு மவுசு உண்டு.
Course: Dessert
Cuisine: Indian
Keyword: rasmalai

Ingredients for ரசமலாய்

 • 2 litres பால்
 • சர்க்கரை தேவையான அளவு
 • 1 எலுமிச்சம் பழம்
 • 1 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
 • பிஸ்தா தேவையான அளவு
 • பாதாம் தேவையான அளவு
 • முந்திரி தேவையான அளவு
 • 1 மேஜைக்கரண்டி சோள மாவு
 • 1 மேஜைக்கரண்டி குங்குமப்பூ

How to make ரசமலாய்

 • முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து 2 துண்டாக நறுக்கி அதன் சாறை எடுத்து வடி கட்டி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து, முந்திரி, பாதாம், மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் அளவு பாலை ஊத்தி சுட வைக்கவும். (பால் சுடும் வரை அதன் மேலே ஆடையைக் கட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அவ்வப்போது பாலை கிண்டி விடவும்.)
 • பால் கொதித்து பொங்கும் போது அதில் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு பன்னீர் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் வந்து விடும்.
 • இப்போது அடுப்பில் இருந்து இறக்கி ஒரு வடிகட்டி மூலம் தண்ணீர் தனியாகவும் பன்னீர் தனியாகவும் பிரித்துக் கொள்ளவும்.
 • பின்பு பன்னீரில் 2 அல்லது 3 முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி மீண்டும் பில்டர் செய்து கொள்ளவும். (இவ்வாறு தண்ணீரை விட்டுக் கழுவினால் தான் பன்னீரில் உள்ள எலுமிச்சை வாசம் நீங்கும்.)
 • அடுத்து இந்த பன்னீரை ஒரு பருத்தி துணியில் போட்டு நன்கு இறுக்கி இதில் இருக்கும் தண்ணீரை முழுமையாக எடுத்து விட வேண்டும்.
 • பின்னர் துணியை மீண்டும் இறுக்கமாக ஆக்கி மீதமுள்ள ஈரப்பதமும் போவதற்கு ஒரு பாத்திரத்தின் மீது பில்டரை போட்டு அதன் மீது இதை வைத்து சுமார் 45 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும்.
 • அடுத்து ராப்ரி செய்வதற்கு மிதமான சூட்டில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் அளவு பாலை மற்றும் 200 கிராம் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைந்து பால் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
 • பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் கால் மேஜைக்கரண்டி அளவு குங்குமப்பூ மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூள் தூவி ஆடை தட்டாமல் கிண்டி விட்டு சுமார் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
 • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரையை போட்டு 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கி விட்டு அடுப்பை அணைத்து பாத்திரத்தை அடுப்பிலேயே வைத்து இருக்கவும்.
 • இப்பொழுது ராப்ரியில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரி, பிஸ்தா, மற்றும் பாதாமை போட்டு கலக்கி விடவும்.
 • ராப்ரி கெட்டியாக ஆகி விடக்கூடாது சிறிதளவு தண்ணியாக இருக்கும் போதே அடுப்பை அணைத்து அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
 • இப்பொழுது துணியில் கட்டி வைத்திருக்கும் பன்னீரை எடுத்து ஒரு தட்டில் போட்டு அதை நன்றாக கைகளின் மூலம் நசுக்கி தேய்த்த பின் அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு சோள மாவை சேர்த்து நன்கு மாவாக பிணைந்து கொள்ளவும். (8 இருந்து 10 நிமிடம் வரை பிசைய வேண்டும்.)
 • பன்னீர் நன்கு மிருதுவான மாவு பதம் வந்ததும் அதை சிறு சிறு உருண்டைகளாக மெதுவாக பக்குவமாக பிடித்து தட்டி வைத்துக் கொள்ளவும். (அழுத்தி தட்டி விடக்கூடாது அப்படி செய்தால் சர்க்கரை தண்ணியில் போடும் போது உருண்டை உடைந்துவிடும்.)
 • அடுத்து அடுப்பில் இருக்கும் சர்க்கரை தண்ணியை எடுத்து பில்டர் செய்து மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
 • சர்க்கரை தண்ணி கொதித்ததும் அதில் தட்டி வைத்திருக்கும் பன்னீரை மெதுவாக ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை தண்ணியில் இறக்கி விட்டு அதில் ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.
 • 15 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் பன்னீர் நன்கு பெரிதாக ஊதி இருக்கும்.
 • இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை தண்ணீரில் இருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக எடுத்து அதிலிருக்கும் சர்க்கரை தண்ணீரை பக்குவமாக அழுத்தி எடுத்து விடவும்.
 • அதில் இருக்கும் சர்க்கரை தண்ணீர் எடுத்த பின் அதை செய்து வைத்திருக்கும் ராப்ரியில் போட்டு ஊற விடவும்.
 • சுமார் 1 லிருந்து 2 மணி நேரத்திற்குப் பிறகு இதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேலே சிறிதளவு குங்குமப்பூவை தூவி பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் சுவையான ரசமலாய் தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

You can find the Rasmalai recipe in English here.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*