Home Tamil பெப்பர் சிக்கன்

பெப்பர் சிக்கன்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
செட்டி நாடு பாரம்பரிய சமையல் முறையை பின்பற்றி செய்யப்படும் இந்த உணவு வகை செய்வதற்கு மிகவும் எளிமையானது.

பொதுவாக சிக்கன் என்றாலே அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிக்கன் வகை உணவுகளில் சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் தந்தூரி, கிரில் சிக்கன் மற்றும் பெப்பர் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவைகளில் காரத்தை அதிகம் விரும்புபவர்களுக்கு பெப்பர் சிக்கன் டாப் சாய்ஸாக உள்ளது. செட்டி நாடு பாரம்பரிய சமையல் முறையை பின்பற்றி செய்யப்படும் இந்த உணவு வகை செய்வதற்கு மிகவும் எளிமையானது. பெப்பர்ரை தவிர்த்து வேறு ஏதும் அதிகம் மசாலாக்களை சேர்க்காததுவே இதற்கு காரணம்.

Pepper Chicken

சிக்கனுடன் மிளகையும் சேர்ப்பதால் இவை மற்ற சிக்கன் உணவுகளை விட உடம்பிற்கு சத்தானது. மிளகு சளி, வாயு பிரச்சனைகள், மற்றும் ஜீரணத்துக்கு மிகவும் உகந்தது. இப்பொழுது கீழே பெப்பர் சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.

Pepper Chicken
5 from 1 vote

பெப்பர் சிக்கன்

செட்டி நாடு பாரம்பரிய சமையல் முறையை பின்பற்றி செய்யப்படும் இந்த உணவு வகை செய்வதற்கு மிகவும் எளிமையானது.
Course: Main Course, Side Dish
Cuisine: Chettinad, South Indian
Keyword: pepper chicken

Ingredients

  • 500 கிராம் சிக்கன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 1/2 மேசைக்கரண்டி மிளகு
  • 1 மேசைக்கரண்டி சோம்பு
  • 1 மேசைக்கரண்டி சீரகம்
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் மிளகு, சோம்பு, மற்றும் சீரகத்தை ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி மற்றும் பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் சிறிதாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக பொன் நிறம் வரும் அளவிற்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • பின்னர் சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பெப்பர் நன்றாக சிக்கன் துண்டுகளில் ஓட்டும் அளவிற்கு புரட்டிப் போடவும்.
  • பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு சிக்கனை வேக விடவும்.
  • சிக்கன் வெந்ததும் அதில் சிறிது அளவு கருவேப்பிலையை போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சிறிது கொத்தமல்லியை மேலே தூவவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.
  • இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Get the recipe for Pepper Chicken in English

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter