தக்காளி சாட்

By Praveen Kumar
தக்காளி சாட் ஒரு வித்தியாசமான மற்றும் அற்புதமான மாலை நேர சாட் ஆகும். இதை நம் வீட்டில் இருக்கும் சுட்டீஸ்கள் மட்டுமல்ல பெரியவர்களும் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

மாலை நேர சிற்றுண்டிகள் நம் அனைவரது வாழ்விலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகை ஆகாது. மாலை நேரத்தில் ஏதேனும் வித்தியாசமான மற்றும் சுவையான சிற்றுண்டியை சுவைப்பதில் இருக்கும் மனநிறைவே தனி தான். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகவும் சுவையான தக்காளி சாட். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான தக்காளி சாட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Tamatar Chaat
Tamatar Chaat

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டிகளை தினம் தோறும் சுவைக்க வேண்டும் என்று யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? வாரம் முழுவதும் சற்று கடினம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் நம்மால் செய்து சுவைக்க முடியும். அதற்கு இந்த தக்காளி சாட் நல்ல தொடக்கமாக இருக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

தக்காளி சாட் செய்ய நாம் பயன்படுத்தும் தக்காளி, மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், ஆம்சூர் தூள், சீரகம், கசகசா, சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா, சாட் மசாலா, பிளாக் சால்ட், இஞ்சி பொடி, பொடி வெல்லம் போன்ற மசாலாக்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து ஒரு அற்புதமான கலவையாக இருக்கும்.

இதற்காகவே ஸ்பெஷலாக நாம் தயார் செய்யும் புளி சட்னி மற்றும் மசாலா சர்க்கரை பாகை இதில் சேர்க்கும்போது இவை படுக்கச்சிதமாக இருக்கும். அதனுடன் ஓமப் பொடி மற்றும் காராபூந்தி இதனின் சுவையை வேற லெவலுக்கு எடுத்து செல்லும்.

சில குறிப்புகள்:

நன்கு பழமாக இருக்கும் தக்காளி பழங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் தக்காளி சாட் மிக சுவையாக இருக்கும். தக்காளி சற்று காயாக இருந்தாலும் அதை தவிர்த்து விடுங்கள்.

இவ் உணவின் வரலாறு:

தக்காளி சாட் முதல் முதலாக 1950 களில் இந்தியாவை சார்ந்த உத்தர் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் தீனா நாத் கேசரி என்பவரால் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு இருந்ததால் இவை குறுகிய காலத்திலேயே உத்தர் பிரதேசம் முழுவதும் பிரபலமடைய தொடங்கி இருக்கிறது. பின்னர் மெல்ல மெல்ல வட இந்தியா முழுவதும் இவை பிரபலம் அடைந்திருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

தக்காளி சாட் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 30 லிருந்து 35 நிமிடம் எடுக்கும்.

தக்காளி சாட்டை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

தக்காளி சாட்டை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் அதை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் லேசாக சுட வைத்து உண்ணலாம். இருப்பினும் தக்காளி சாட்டை செய்யும் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

தக்காளி சாட் செய்ய நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

நாம் இதில் சேர்க்கும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, B6, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் K மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் மஞ்சள் தூளில் நார் சத்து, புரத சத்து,  இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, சிங்க், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண், மற்றும் கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் இஞ்சில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

Tamatar Chaat
No ratings yet

தக்காளி சாட்

தக்காளி சாட் ஒரு வித்தியாசமான மற்றும் அற்புதமான மாலை நேர சாட் ஆகும். இதை நம் வீட்டில் இருக்கும் சுட்டீஸ்கள் மட்டுமல்ல பெரியவர்களும் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.
Prep Time15 minutes
Cook Time30 minutes
Total Time45 minutes
Course: Main Course, Snack
Cuisine: Indian, North Indian

தேவையான பொருட்கள்

  • 6 தக்காளி
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 10 கொட்டை இல்லாத பேரிச்சம் பழம்
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 2 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 tsp ஆம்சூர் தூள்
  • 1 1/2 tsp சீரகம்
  • 1 tsp கசகசா
  • 1 1/2 tsp சீரக தூள்
  • 1 1/2 tsp மல்லி தூள்
  • 1/2 tsp கரம் மசாலா
  • 2 tsp சாட் மசாலா
  • 1 tsp பிளாக் சால்ட்
  • 1/2 tsp இஞ்சி பொடி
  • 2 tsp பொடி வெல்லம்
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 5 முந்திரிப் பருப்பு
  • 1/2 எலுமிச்சம் பழம்
  • 1 கை அளவு ஓமப் பொடி
  • 1 கை அளவு காராபூந்தி
  • 1 துண்டு புளி
  • தேவையான அளவு சர்க்கரை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பேரிச்சம் பழம், முந்திரிப் பருப்பை நறுக்கி, புளியை தண்ணீரில் கரைத்து, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பேரிச்சம் பழத்தை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் இரண்டு நிமிடம் வரை வேக விடவும்.
  • இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் அரை மேஜைகரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், அரை மேஜைகரண்டி மல்லி தூள், அரை மேஜைகரண்டி சீரக தூள், அரை மேஜைகரண்டி ப்ளாக் சால்ட், அரை மேஜைகரண்டி உப்பு, பொடித்த வெல்லம், மற்றும் இஞ்சி பொடியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் மூன்று நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • மூன்று நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை கீழே இறக்கி வைத்து சற்று நேரம் ஆற விடவும்.
  • அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை ஆற விடவும்.
  • உருளைக்கிழங்கு ஆறியதும் அதனின் தோலை உரித்து அதை நன்கு மசித்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் சுமார் மூன்று மேஜைகரண்டி அளவு சர்க்கரையை போட்டு அது நன்கு கரையும் வரை அதை கலந்து விடவும்.
  • சர்க்கரை நன்கு கரைந்ததும் அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு சீரக தூள், அரை மேஜைகரண்டி அளவு சாட் மசாலா, அரை மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூள், மற்றும் அரை மேஜைகரண்டிய அளவு பிளாக் சால்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய்யை சேர்த்து அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் சீரகம், கசகசா, மற்றும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் மஞ்சள் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு மல்லி தூள், ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு மேஜைகரண்டி அளவு சீரக தூள், மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு தக்காளி மசியும் வரை அதை வதக்கவும்.
  • தக்காளி நன்கு மசிந்ததும் அதில் சுமார் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் கரம் மசாலா, ஆம்சூர் தூள், மற்றும் ஒன்றரை மேஜைகரண்டி அளவு சாட் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்துவிட்டு அதை அப்படியே வைக்கவும்.
  • இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் தக்காளி சாட்டில் இருந்து இரண்டு கரண்டி அளவு எடுத்து அதில் வைக்கவும்.
  • பின்பு அதன் மேலே சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு நெய், ஒரு மேஜைகரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் புளி சட்னி, மற்றும் உங்கள் இனிப்புக்கேற்ப நாம் செய்து வைத்திருக்கும் மசாலா சர்க்கரை பாகை சேர்க்கவும்.
  • அடுத்து அதன் மேலே சற்று ஓமப் பொடி, காராபூந்தி, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை சுட சுட பரிமாறவும்.

 

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

தக்காளி சாட்டை செய்ய நாம் பிளாக் சால்டை தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமா?

பிளாக் சால்டை நாம் பயன்படுத்தினால் அது ஒரு விதமான வித்தியாசமான சுவையை இந்த சாட்டுக்கு கொடுக்கும். பிளாக் சால்ட் இல்லை என்றால் நீங்கள் தாராளமாக நாம் வழக்கமாக பயன்படுத்தும் உப்பையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

தக்காளி சாட்டில் நாம் அவசியம் இனிப்புத் தண்ணீரை சேர்க்க வேண்டுமா?

உங்களுக்கு இனிப்பு பிடிக்காது என்றால் நீங்கள் தாராளமாக அதை தவிர்த்து விடலாம்.

தக்காளி சாட்டை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் காரத்திற்கு ஏற்ப கூடுதலாக அரை அல்லது ஒரு மேஜைக்காண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை பயன்படுத்தலாம்.

 

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment