காலிஃப்ளவர் புலாவ்

By Praveen Kumar
காலிஃப்ளவர் புலாவ் மிகவும் சுவையான ஒரு உணவு. இதை வெகு எளிதில் சொற்பமான பொருட்களை கொண்டு குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

நம்மில் பல பேர் குறிப்பாக விசேஷ நாட்களின் போது குறைந்த நேரத்தில் ஏதாவது வித்தியாசமான மற்றும் ரிச்சான உணவை செய்து முடித்துவிட்டு நம்முடைய குடும்பத்தாருடன் சேர்ந்து நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று விரும்புவது இயல்புதான். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையாக நாம் இன்று இங்கு காண இருக்கும் காலிஃபிளவர் புலாவ் நிச்சயம் இருக்கும். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான காலிஃப்ளவர் புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Cauliflower Pulao
Cauliflower Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

புலாவுகள் பெரும்பாலும் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு வகை தான். அதிலும் காலிஃப்ளவர் புலாவை பற்றி கேட்கவே வேண்டாம். வெறும் காலிபிளவர், வெங்காயம், தக்காளி, மற்றும் வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களைக் கொண்டே இதை வெகு எளிதில் எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்துவிடலாம். அதுமட்டுமின்றி நம் பிள்ளைகளுக்கு நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் மத்திய உணவுகளுக்கு இந்த காலிபிளவர் புலாவ் ஒரு அருமையான மாற்றாக இருக்கும். நீங்கள் இந்த காலிஃப்ளவர் புலாவை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

காலிஃப்ளவர் புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசி, காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கரம் மசாலா, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மிளகு, நட்சத்திர சோம்பு, கிராம்பு,  ஜாதிபத்ரி, மற்றும் பிரியாணி இலை போன்ற மசாலா பொருட்களுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து மிக மணமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். நிச்சயம் இதை உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்.

சில குறிப்புகள்:

காலிஃப்ளவரை நறுக்கியவுடன் கொதிக்கும் தண்ணீரில் பத்து நிமிடம் போட்டால் அதில் ஏதேனும் புழுக்கள் இருந்தால் அது மடிந்து விடும்.

இவ் உணவின் வரலாறு:

புலாவ் எட்டாம் நூற்றாண்டின் போது Abbasid சாம்ராஜ்யத்தில் தான் முதல் முதலாக செய்யப்பட்டு இருப்பதாக வரலாற்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் புலாவில் இருந்து தான் பிரியாணியே வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். முகலாய படையெடுப்பின் போது அவர்கள் கைப்பற்றிய அனைத்து நாடுகளில் இருக்கும் சமையல் முறைக்குள்ளும் புலாவ் நுழைந்திருக்கிறது. கலா போக்கில் மக்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சமையல் முறைகேற்ப மாற்றங்களை செய்து புலாவை செய்யத் தொடங்கி இருக்கின்றனர். அதுவே இன்றைக்கு பலவிதமான புலாவுகள் இருப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

காலிஃப்ளவர் புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 30 லிருந்து 35 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 45 லிருந்து 50 நிமிடம் எடுக்கும்.

காலிஃப்ளவர் புலாவை முழுமையாக சுமார் 80 நிமிடத்தில் இருந்து 85 நிமிடத்திற்குக்ள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

காலிஃப்ளவர் புலாவை கைப்படாமல் பார்த்துக் கொண்டாள் சுமார் ஒருநாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

காலிஃப்ளவர் புலாவில் சேர்க்கப்படும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

இதில் நாம் உபயோகிக்கும் காலிஃப்ளவரில் நார் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் C, K, மற்றும் B6 உள்ளது. இவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் தக்காளியில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

நாம் இதில் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் இஞ்சில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்க்கு உதவுகிறது.

Cauliflower Pulao
No ratings yet

காலிஃப்ளவர் புலாவ்

காலிஃப்ளவர் புலாவ் மிகவும் சுவையான ஒரு உணவு. இதை வெகு எளிதில் சொற்பமான பொருட்களை கொண்டு குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time30 minutes
Cook Time40 minutes
Total Time1 hour 10 minutes
Course: Main Course
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 1 முழு காலிஃப்ளவர்
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 tsp கரம் மசாலா
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 இலவங்கப்பட்டை
  • 1/2 tsp மிளகு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 சிறு துண்டு ஜாதிபத்ரி
  • 1 பிரியாணி இலை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மற்றும் சுமார் அரை மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை ஊற விடவும்.
  • அடுத்து ஒரு குக்கரையும் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மிளகு, நட்சத்திர சோம்பு, ஜாதிபத்ரி, மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு தக்காளி மசியும் வரை அதை வதக்கவும்.
  • தக்காளி மசிந்தவுடன் அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் இரண்டு விசில் வரும் வரை அதை வேகவிடவும்.
  • இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதை சுமார் பத்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
  • பத்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து காலிஃப்ளவர் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

 

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

காலிஃப்ளவர் புலாவை செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை நாம் பயன்படுத்தலாமா?

உங்களுக்கு சீரக சம்பா அரிசி பிடிக்கும் என்றால் நீங்கள் தாராளமாக சீரக சம்பா அரிசியையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலிஃப்ளவர் புலாவில் நாம் வேறு ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?

தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பம் என்றால் பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலிஃப்ளவர் புலாவை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் பிடிக்கும் என்றால் நீங்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது உங்களது காரத்திற்க்கு ஏற்ப அரை அல்லது ஒரு மேஜைகரண்டி அளவு காஷ்மீரி மிளகாய் தூளை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

காலிஃப்ளவர் புலாவிற்கு ஏற்ற சைடிஷ்கள் என்னென்ன?

பன்னீர் 65, பன்னீர் டிக்கா, பன்னீர் பட்டர் மசாலா, மஷ்ரூம் மஞ்சூரியன், வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை போன்ற சைடிஷ்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சிக்கன் 65, சிக்கன் மஞ்சூரியன், சில்லி சிக்கன் போன்ற சைடிஷ்கள் அட்டகாசமாக இருக்கும்.

 

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment