காஷ்மீரி வெஜிடபிள் புலாவ்

By Praveen Kumar
காஷ்மீரி வெஜிடபிள் புலாவ் ஒரு அட்டகாசமான மற்றும் ரிச்சான உணவு. பண்டிகை மற்றும் பிறந்தநாள் விழாக்களின் போது குறைந்த நேரத்தில் எளிதாக செய்து முடிக்க கச்சிதமான ஒரு உணவும் கூட.

நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு ஸ்பெஷலான அல்லது வித்தியாசமான உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது இயல்புதான். அதுவே நாம் வழக்கமாக செய்து உண்ணும் உணவை சற்று ஸ்பெஷல் ஆக மாற்றி செய்து சுவைப்பதில் இருக்கும் சுகமே தனிதான். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது நாம் வழக்கமாக செய்து உண்ணும் வெஜிடபிள் புலாவுக்கு மாற்றாக ஸ்பெஷலான காஷ்மீரி வெஜிடபிள் புலாவ்.

என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான காஷ்மீரி வெஜிடபிள் புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Kashmiri Veg Pulao
Kashmiri Veg Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

காஷ்மீரி வெஜிடபிள் புலாவ் மிக எளிதில் குறைந்த பொருட்களை கொண்டு செய்யக்கூடிய ஒரு கிராண்டான உணவு. இவை நம் பிள்ளைகளுக்கு மட்டும் இன்றி வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

காஷ்மீரி வெஜிடபிள் புலாவை செய்ய நாம் சேர்க்கும் பாசுமதி அரிசி, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, ஷாஹி ஜீரா, சோம்பு, மற்றும் குங்குமப்பூ பால் நன்கு வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் உலர் திராட்சை உடன் கலந்து அட்டகாசமாக இருக்கும். அதனுடன் நாம் சேர்க்கும் மாதுளை விதைகள் மற்றும் பைனாப்பிள் துண்டுகள் வேற லெவல் சுவையை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.

சில குறிப்புகள்:

நாம் பாசுமதி அரிசியை வேகவைக்கும் சுடுதண்ணீரில் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் நன்கு வெந்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

இவ் உணவின் வரலாறு:

புலாவ் உலகில் மிகவும் பழமையான ஒரு உணவு முறை. பிரியாணி உதயமாவதற்கு முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உணவு வகை இவை. புலாவ் 750 CE யில் Abbasid சாம்ராஜ்யத்தில் உதயமானதாக வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

காஷ்மீரி வெஜிடபிள் புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 40 லிருந்து 45 நிமிடம் எடுக்கும்.

காஷ்மீரி வெஜிடபிள் புலாவை முழுமையாக சுமார் 50 நிமிடத்தில் இருந்து 55 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

காஷ்மீரி வெஜிடபிள் புலாவில் நாம் மாதுளை விதைகள் சேர்ப்பதினால் அதை அன்றே உண்டு விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

காஷ்மீரி வெஜிடபிள் புலாவில் சேர்க்கப்படும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் K மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் பாதாமில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் E உள்ளது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, ரத்த அழுத்தம், மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் பைனாப்பிளில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், விட்டமின் C, மற்றும் B6 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் மாதுளை பழத்தில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை இருதயம், மூளை, மற்றும் சிறுநீர்ப்பாதை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

Kashmiri Veg Pulao
No ratings yet

காஷ்மீரி வெஜிடபிள் புலாவ்

காஷ்மீரி வெஜிடபிள் புலாவ் ஒரு அட்டகாசமான மற்றும் ரிச்சான உணவு. பண்டிகை மற்றும் பிறந்தநாள் விழாக்களின் போது குறைந்த நேரத்தில் எளிதாக செய்து முடிக்க கச்சிதமான ஒரு உணவும் கூட.
Prep Time15 minutes
Cook Time45 minutes
Total Time1 hour
Course: Main Course
Cuisine: Kashmiri

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 2 வெங்காயம்
  • 4 இலவங்கப்பட்டை
  • 4 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 3 கருப்பு ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 tsp ஷாஹி ஜீரா
  • 1/2 tsp சோம்பு
  • 10 tsp குங்குமப்பூ பால்
  • 15 உலர் திராட்சை
  • 20 முந்திரி பருப்பு
  • 20 பாதாம் பருப்பு
  • தேவையான அளவு மாதுளை விதைகள்
  • தேவையான அளவு பைனாப்பிள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு சுடு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை அதை ஊற வைக்கவும்.
  • அடுத்து வெங்காயம், பைனாப்பிளை நறுக்கி, மற்றும் மாதுளை பழத்தை உரித்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு சுமார் பத்து மேஜைக்கரண்டி அளவு பாலில் குங்குமப்பூவை போட்டு அதை சுடவைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • நெய் சுட்டதும் அதில் முந்திரிப் பருப்பை போட்டு அது நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதில் பாதாம் பருப்பை போட்டு அது நன்கு பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அதேபோன்று அடுத்து அதில் உலர் திராட்ச்சையை சேர்த்து அதை சுமார் ரெண்டு நிமிடம் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அந்த pan னில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வதக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • நெய் சுட்டதும் அதில் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, ஷாஹி ஜீரா, மற்றும் சோம்பை சேர்த்து அது நன்கு மணம் வரும் வரை அதை வதக்கவும்.
  • பின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை பக்குவமாக சேர்த்து அரிசி உடைந்து விடாமல் கவனமாக அதை ஒரு கரண்டியின் மூலம் கிளறி விட்டு சுமார் இரண்டி லிருந்து மூன்று நிமிடம் வரை வதக்கவும்.
  • ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் சுட வைத்திருக்கும் தண்ணீரை சேர்த்து அதை பக்குவமாக கிளறி விடவும்.
  • அடுத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் நாம் தயாரித்து வைத்திருக்கும் குங்குமப்பூ பாலை சேர்த்து அதை பக்குவமாக கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் பத்து நிமிடம் வரை அதை வேகவிடவும்.
  • பத்து நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் உலர் திராட்ச்சையை சேர்த்து பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் அதை ஒரு கரண்டியின் மூலம் கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் உரித்து வைத்திருக்கும் மாதுளை விதைகள் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் சிறுசிறு பைனாப்பிள் துண்டுகளை மேலே தூவி விடவும்.
  • அவ்வளவுதான் உங்கள் அற்புதமான காஷ்மீரி வெஜிடபிள் புலாவ் தயார்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

காஷ்மீரி வெஜிடபிள் புலாவ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை நாம் பயன்படுத்தலாமா?

கூடவே கூடாது. சீரகசம்பா அரிசியை நாம் பயன்படுத்தினால் இதனின் சுவை முற்றிலுமாக மாறிவிடும்.

காஷ்மீரி வெஜிடபிள் புலாவை ஸ்பைசியாக மாற்றுவதற்கு நாம் பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாமா?

காஷ்மீரி வெஜிடபிள் புலாவ் சற்று இனிப்பாகத்தான் இருக்கும். அதுதான் அதனுடைய இயல்பான சுவை. நாம் பச்சை மிளகாயை சேர்த்தால் அதனின் இயல்பான சுவை முற்றிலுமாக மாறிவிடும்.

காஷ்மீரி வெஜிடபிள் புலாவுடன் கச்சிதமாக பொருந்தும் சைடிஷ்கள் என்னென்ன?

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment