வெஜிடபிள் பிரியாணி

By Praveen Kumar
சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.

இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. பிரியாணிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, இறால் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெஜிடபிள் பிரியாணி.

வெஜிடபிள் பிரியாணி / Vegetable Biryani
வெஜிடபிள் பிரியாணி / Vegetable Biryani

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஃபிஷ் பிரியாணி, மற்றும் இறால் பிரியாணி எவ்வாறோ சைவ பிரியர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி, மற்றும் பன்னீர் பிரியாணி. மாமிசங்களை சேர்த்து செய்யப்படும் பிரியாணி அளவிற்கு இதில் புரதச்சத்து இல்லை என்றாலும் இதில் நாம் பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் வெஜிடபிள் பிரியாணியும் உடம்புக்கு நல்லது தான்.

இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் காய்கறிகள் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். அது மட்டுமின்றி அசைவ பிரியாணிகளை செய்வதை விட இவை குறைந்த நேரமே எடுத்து கொள்ளும். இதற்கு பொதுவாக அசைவ பிரியாணிகளை செய்யும் போது மாமிசங்களை நன்கு கழுவி சுத்தம் செய்வதற்கு சிறிது நேரம் எடுத்து கொள்வதும் ஒரு காரணம்.

இப்பொழுது கீழே வெஜிடபிள் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Vegetable Biryani
3.75 from 4 votes

வெஜிடபிள் பிரியாணி

சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Main Course
Cuisine: South Indian, Tamil, Tamil Nadu
Keyword: Vegetable Biryani

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாசுமதி அரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 கேரட்
  • 8 to 10 பீன்ஸ்
  • ¼ காலிஃப்ளவர்
  • 1 உருளைக்கிழங்கு
  • ¼ கப் பச்சை பட்டாணி
  • ¼ கப் தயிர்
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பூண்டு பல்
  • 1 இஞ்சி துண்டு
  • ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • 2 பிரியாணி இலை
  • 1 துண்டு பட்டை
  • 3 ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • 1 நட்சத்திர பூ
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு புதினா

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் பாசுமதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
  • அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, மற்றும் பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மற்றும் பச்சை பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் கால் கப் அளவு தயிரை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ரெண்டரை கப்பில்லிருந்து மூன்று கப் வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  • பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதில் சேர்த்து அதை பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.
  • பின்பு அதில் ஒரு மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும். (பாசுமதி அரிசி எளிதாக வேகும் தன்மை கொண்டதால் கவனமாக இருக்க வேண்டும்.)
  • ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை அப்படியே சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வைக்கவும்.
  • 20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து வெஜிடபிள் பிரியாணியை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆனியன் ரைத்தா உடன் அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமாக இருக்கும் வெஜிடபிள் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

செய்முறை வீடியோ

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

3.75 from 4 votes (4 ratings without comment)

Leave a Comment