வெஜ் சீஸ் சாண்ட்விச்

By Praveen Kumar
வெஜ் சீஸ் சாண்ட்விச் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது எளிதில் செய்து முடிக்க இவை கச்சிதமானது.

வழக்கமாக நாம் சுட சுட மொறு மொறுப்பான ஈவினிங் ஸ்நாக்ஸ்களை சுவைப்பதற்கு மாற்றாக நன்கு ஜூஸியாக மற்றும் கீரீமியாக ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? நாம் இன்று இங்கு காண இருப்பது வெஜ் சீஸ் சாண்ட்விச் என்கின்ற அவ்வாறான ஒரு உணவு தான். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான வெஜ் சீஸ் சாண்ட்விச் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Veg Cheese Sandwich / வெஜ் சீஸ் சாண்ட்விச்
Veg Cheese Sandwich / வெஜ் சீஸ் சாண்ட்விச்

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

நம் பிள்ளைகளுக்கு அவர்கள் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் அவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக அதிக நேரம் பிடிக்காமல் அதே நேரத்தில் சத்தான மற்றும் சுவையான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க நம் அனைவருக்கும் விருப்பம் இருக்கும். இந்த அட்டகாசமான வெஜ் சீஸ் சாண்ட்விச் அதற்கு ஏற்ற உணவு. இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நாம் இந்த வெஜ் சீஸ் சாண்ட்விச்சி சேர்க்கும் கேரட், குடை மிளகாய்கள், பெரிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன், மற்றும் கொத்தமல்லியை, நாம் சேர்க்கும் மிளகு தூள், ரெட் சில்லி ஃப்ளெக்ஸ், இத்தாலியன் சீசனிங், மற்றும் உப்பு போன்ற சுவையூட்டிகளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து அருமையான கீரீமியான சுவையை கொடுக்கும். இதை கட்டாயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள்.

சில குறிப்புகள்:

பால் சரியாகத் திரியவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் எலுமிச்சை சாரை பாலில் சேர்த்தால் நன்கு திரிந்து விடும்.

திரிந்து வந்த பால் கட்டிகளில் இருக்கும் தண்ணீரை வடித்த பின் மீண்டும் அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி வடிகட்டினால் அதில் இருக்கும் எலுமிச்சம்பழம் மணம் முற்றிலும் அகன்று விடும்.

இவ் உணவின் வரலாறு:

நீண்ட காலங்களாகவே பிரட்டுடன் காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளை வைத்து உண்ணும் பழக்கம் மனிதர்களிடம் இருந்திருந்தாலும் 18 ஆம் நூற்றாண்டின் போது தான் இதற்கு சாண்ட்விச் என்கின்ற வடிவம் வந்திருக்கிறது. இதற்கு பின் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் John Montagu, 4th Earl of Sandwich என்கின்ற மேற்குடியாளர் சீட்டாடும் போது ஃபோர்க் ஸ்பூன் பயன்படுத்தாமல் சாப்பிட எளிதாக இருக்கக்கூடிய உணவு வேண்டும் என்பதால் ரெண்டு பிரட்டுக்கு நடுவே வேகவைத்த மாமிச துண்டுகளை வைத்து உண்ண தொடங்கி இருக்கிறார். இந்த உணவுக்கே

பின்னர் சாண்ட்விச் என்று பெயர் வந்திருக்கிறது. முதலில் லண்டன் நகரில் பிரபலம் அடைந்து பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் முழுவதும் தொழில்மயமாக்களின் போது  பிரபலமடைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்காவிலும் பிரபலம் அடைய தொடங்கியது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

வெஜ் சீஸ் சாண்ட்விச் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை செய்ய சுமார் 5  நிமிடமே போதுமானது.

வெஜ் சீஸ் சாண்ட்விச்சை முழுமையாக சுமார் 10 நிமிடத்தில் இருந்து 15 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம். (கிரீம் சீஸ்ஸை முன்னதாகவே தயார் செய்து வைத்திருந்தால்).

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

வெஜ் சீஸ் சாண்ட்விச்சை சுமார் ரெண்டு நாள் வரை ஃபிரிட்ஜில் வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

வெஜ் சீஸ் சாண்ட்விச் செய்ய நாம் பயன்படுத்தும் கோதுமை பிரட்டில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் சோடியம் இருக்கிறது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

நாம் சேர்க்கும் குடை மிளகாயில் விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் சேர்க்கும் வெள்ளரிக்காயில் புரத சத்து, நார் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் C, மற்றும் K உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் மற்றும் எடை குறைப்புக்கு உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் கிரீம் சீஸ்ஸில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மற்றும் விட்டமின் D உள்ளது.

Veg Cheese Sandwich
1 from 1 vote

வெஜ் சீஸ் சாண்ட்விச்

வெஜ் சீஸ் சாண்ட்விச் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது எளிதில் செய்து முடிக்க இவை கச்சிதமானது.
Prep Time10 minutes
Cook Time10 minutes
Total Time20 minutes
Course: Appetizer, Breakfast, Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup கீரீம் சீஸ்
  • 2 கேரட்
  • 1 சிவப்பு குடை மிளகாய்
  • 1 பச்சை குடை மிளகாய்
  • 1 மஞ்சள் குடை மிளகாய்
  • 1 பெரிய வெள்ளரிக்காய்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 பல் பூண்டு
  • 1 tsp மிளகு தூள்
  • 1/2 tsp ரெட் சில்லி ஃப்ளெக்ஸ்
  • 2 tsp இத்தாலியன் சீசனிங்
  • 1 tsp உப்பு
  • தேவையான அளவு கோதுமை பிரட்
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு ஸ்ப்ரிங் ஆனியன்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொழுப்பு நிறைந்த பாலை ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • பின்பு அதில் எலுமிச்சை சாறை ஊற்றி பால் திரிந்து தெளி நீர் ஆகும் வரை காத்திருக்கவும்.
  • பால் திரிந்ததும் அதை ஒரு துணிக்கு மாற்றி துணியை இறுக்கி அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக வடித்து விடவும்.
  • பின்பு அதில் மீண்டும் சுத்தமான தண்ணீரை ஊற்றி நன்கு கழுவி தண்ணீரை துணியின் மூலம் முற்றிலும் வடித்து அதை சுமார் 2 மணி வரை அப்படியே வைக்கவும்.
  • இப்பொழுது கேரட், குடை மிளகாய்கள், பெரிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • 2 மணி நேரம் கழித்து அந்த பால் கட்டிகளை சிறு சிறு துண்டாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அது நன்கு கீரீமியாகும் வரை அரைக்கவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், குடை மிளகாய்கள், பெரிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன், மற்றும் கொத்தமல்லியை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பிறகு அதில் மிளகு தூள், ரெட் சில்லி ஃப்ளெக்ஸ், இத்தாலியன் சீசனிங், மற்றும் உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது ஒரு பிரட்டை எடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் கலவையை ஒரு ஸ்பூன் மூலம் எடுத்து வைத்து அதை நன்கு பரப்பி விடவும்.
  • பின்பு அதன் மேலே ஒரு பிரெட்டை வைத்து அதை லேசாக அழுத்தி பின்பு ஒரு கத்தியின் மூலம் பாதியாக நறுக்கவும்.
  • அவ்வளவுதான் உங்கள் சுவையான மற்றும் அற்புதமான வெஜ் சீஸ் சாண்ட்விச் ரெடி.

 

 

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

வெஜ் சீஸ் சாண்ட்விச் செய்ய நாம் பயன்படுத்தும் கீரீம் அல்லது காய்கறி கலவைகளை முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாமா?

தாராளமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

வெஜ் சீஸ் சாண்ட்விச் செய்ய கோதுமை பிரட் தான் பயன்படுத்த வேண்டுமா?

இல்லை. உங்களுக்கு விருப்பம் என்றால் சாதா பிரட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெஜ் சீஸ் சாண்ட்விச்சில் வேறு ஏதேனும் காய்கறிகளை நாம் சேர்த்துக் கொள்ளலாமா?

தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளை நாம் இதனுடன் சேர்க்கலாம்.

வெஜ் சீஸ் சாண்ட்விச்சை இன்னும் காரமாக்குவது எப்படி?

இதை மிதமான காரத்துடன் உண்டால் தான் நன்றாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு காரம் விருப்பம் என்றால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

வெஜ் சீஸ் சாண்ட்விச்சுக்கு உகந்த சைடிஷ் என்ன?

வெஜ் சீஸ் சாண்ட்விச்சை தனியாக உண்பதற்க்கே அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சைடிஷ் கட்டாயம் வேண்டுமென்றால் புதினா சட்னியையோ அல்லது மயோனெய்சையோ நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெஜ் சீஸ் சாண்ட்விச்சில் சேர்க்கப்படும் பூண்டை தவிர்த்து விடலாமா?

உங்களுக்கு பூண்டின் சுவை பிடிக்காது என்றால் தாராளமாக தவிர்த்து விடலாம்

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

1 from 1 vote (1 rating without comment)

Leave a Comment