ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ்

By Praveen Kumar
ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ் மிகவும் சுவையான ஒரு உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

பொதுவாக நம்மில் பல பேருக்கு புலாவ் பிடித்தமான உணவாகத்தான் இருக்கும். புலாவை பலவிதமாக நாம் செய்து சுவைக்கலாம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் சமையல் முறைகேற்ப செய்யப்படும் ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Andhra Veg Pulao
Andhra Veg Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

புலாவ் செய்வதற்கு பொதுவாக சற்று நேரம் பிடிக்கும். அதனாலேயே நாம் புலாவை சமைக்க ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்போம். ஆனால் இந்த ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை குறைந்த நேரத்திலேயே எந்தவித சிரமமும் இன்றி செய்து விடலாம். எந்தவித சமையல் அனுபவம் இல்லாதவர்கள் கூட இதை முதல் முறையிலேயே நன்றாக செய்து விட முடியும். இதில் கூடுதல் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இவை ஒரு அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட. இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ் செய்வதற்க்கென்றே பிரத்யேகமாக தக்காளி, தேங்காய் துண்டுகள், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, பூண்டு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கொத்தமல்லி விதைகள், மிளகு, கல்பாசி, சீரகம், மற்றும் கசகசா கொண்டு ஒரு தனி மசாலா பேஸ்ட்டை நாம் முதலில் தயாரிப்போம். நாம் தயாரித்த இந்த மசாலா பேஸ்ட் நாம் சேர்க்கும் காலிஃப்ளவர், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, கேரட், மற்றும் பாசுமதி அரிசியுடன் சேர்ந்து நன்கு வெந்து மிக அட்டகாசமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

கல்லுப்பை சேர்த்தால் காய்கறிகள் சற்று வேகமாக வெந்துவிடும்.

காய்கறிகளை வேக வைக்கும் போது சரியாக ஒரு மேஜைகரண்டி அளவு தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும். கூடுதலாக சேர்த்தால் காய்கறிகள் சற்று குழைந்து விடும்.

இவ் உணவின் வரலாறு:

புலாவ் பிரியாணிக்கும் முன்னதாக உதயமான ஒரு உணவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் புலாவ் எட்டாம் நூற்றாண்டின் போது Abbasid சாம்ராஜ்யத்தின் போது உதயமான ஒரு உணவாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். காலப்போக்கில் இவை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இன்றைய காலகட்டத்தில் புலாவ் உலகம் முழுவதும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற சமையல் முறையின் படி மக்களால் செய்து சுவைக்கப்படுகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 25 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக உண்ணலாம்.

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை ஒரு நாள் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவில் சேர்க்கப்படும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணி புரத சத்து, நார் சத்து, விட்டமின் K மற்றும் A உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் உருளைக்கிழங்கில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, பொட்டாசியம்,  விட்டமின் C, B6, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் K மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Andhra Veg Pulao
No ratings yet

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ்

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவ் மிகவும் சுவையான ஒரு உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு ஈஸியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time15 minutes
Cook Time45 minutes
Total Time1 hour
Course: Main Course
Cuisine: Andhra

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 1 bowl காலிஃப்ளவர்
  • 1 bowl பீன்ஸ்
  • 1 bowl பச்சை பட்டாணி
  • 2 வெங்காயம்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 தக்காளி
  • 1 cup கேரட்
  • 3 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 15 முந்திரிப் பருப்பு
  • 2 ஏலக்காய்
  • 1 இலவங்கப்பட்டை
  • 4 கிராம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 1 pcs மராத்தி மொக்கு
  • 1 pcs ஜாதிக்காய்
  • 2 pcs ஜாதிப்பத்திரி
  • 1 tsp கொத்தமல்லி விதைகள்
  • 1 tsp மிளகு
  • 2 pcs கல்பாசி
  • 1 tsp சீரகம்
  • 1 tsp கசகசா
  • 1 tsp கல் உப்பு
  • 1 tsp தூள் உப்பு
  • 2 tsp நெய்
  • 1 தேங்காய் துண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1 பிரியாணி இலை
  • தேவையான அளவு புதினா
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து காலிஃப்ளவர், பீன்ஸ், பச்சை பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, கேரட், பச்சை மிளகாய், தேங்காய், புதினா, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பூண்டு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, கொத்தமல்லி விதைகள், மிளகு, கல்பாசி, சீரகம், கசகசா, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேங்காய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் புதினாவை சேர்த்து அதை நன்கு அரைக்கவும்.
  • பின்பு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • அது சுட்டதும் அதில் பிரியாணி இலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
  • முந்திரி பருப்பு பொன்னிறமானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும்வரை அதை வறுக்கவும்.
  • வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
  • 2 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு கல்லுப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை நன்கு கிளறி விடவும்.
  • 3 நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.
  • 15 நிமிடத்திற்குக்ப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து புலாவை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக ஒரு கிளறு கிளறி மீண்டும் மூடியை போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
  • 5 நிமிடத்திற்க்குப் பிறகு ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுடசுட பரிமாறவும்.

 

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் கூடுதலாக வேண்டும் என்றால் கூடுதலாக ரெண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவிர்க்கு உகந்த சைடிஷ்கள் என்னென்ன?

இவை வெறும் வெங்காயம் ரைத்தாவுடன் உண்பதற்க்கே அட்டகாசமாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கூடுதலாக சைடிஷ் வேண்டும் என்றால் பன்னீர் 65, மஷ்ரூம் 65, வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை, மஷ்ரூம் மஞ்சூரியன், மற்றும் பன்னீர் டிக்கா போன்றவை உகந்ததாக இருக்கும்.

ஆந்திரா ஸ்டைல் வெஜிடபிள் புலாவை செய்ய நாம் பயன்படுத்த பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசி பயன்படுத்தலாமா?

உங்களுக்கு சீரக சம்பா அரிசி பிடிக்கும் என்றால் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment