பீட்ரூட் கட்லெட்

By Praveen Kumar
பீட்ரூட்டைஉண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு அசத்தலான கட்லெட்களாக செய்துகொடுக்கலாம்.

மாலை நேர சிற்றுண்டிகளான சமோசா, பஜ்ஜி, போண்டா, பப்ஸ், மற்றும் வடை வரிசையில் கட்லெட்டும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. கட்லெட் இந்தியாவில் மிக பிரபலமான ஒரு மாலை நேர சிற்றுண்டி. பல வகையான மாலை நேர சிற்றுண்டிகள் இருந்தாலும் கட்லெட்டுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது பீட்ரூட் கட்லெட்.

பீட்ரூட் கட்லெட் / Beetroot Cutlet

பீட்ரூட் கட்லெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் பீட்ரூட்டை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை இவ்வாறு அசத்தலான கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள். இதை நாம் வெகு எளிதாகவும் செய்து விடலாம். பீட்ரூட் கட்லெட்டை நாம் பீட்ரூட், பச்சை பட்டாணி, மற்றும் முந்திரியை சேர்த்து செய்வதால் இவை உடம்பிற்கு சத்தானதும் கூட.

இப்பொழுது கீழே பீட்ரூட் கட்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

பீட்ரூட் கட்லெட் / Beetroot Cutlet
5 from 1 vote

பீட்ரூட் கட்லெட்

பீட்ரூட்டைஉண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு அசத்தலான கட்லெட்களாக செய்துகொடுக்கலாம்.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • 5 உருளைக்கிழங்கு
  • ½ கப் பச்சை பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • 4 பிரெட்
  • ½ மேஜைக்கரண்டி சீரக தூள்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • 1 மேஜைக்கரண்டி சாட் மசாலா
  • 4 to 5 முந்திரி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, பீட்ரூட்டை தோல் உரித்து அதை துருவி, பச்சை பட்டாணியை உரித்து, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster யின் மூலமாகவோ toast செய்து அரைத்து கொள்ளலாம்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பட்டாணியை போட்டு வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பட்டாணியை போட்டு அது நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.
  • பட்டாணி வெந்ததும் அதை எடுத்து தண்ணீரை வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரியை போட்டு அது சிறிது நிறம் மாறும் வரை அதை வதக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு அதே pan ல் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் துருவி வைத்திருக்கும் பீட்ரூட்டை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் சீரக தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
  • பிறகு அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஒரு bowl ல் போட்டு வைத்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி, வறுத்து வைத்திருக்கும் முந்திரி, மற்றும் கொத்தமல்லியை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் சோள மாவை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
  • நாம் வதக்கி வைத்திருக்கும் பீட்ரூட் கலவை ஆறியதும் அதை அவரவருக்கு விருப்பமான வடிவில் பிடித்து அதை நாம் கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை bread crumbs ல் போட்டு நன்கு உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள பீட்ரூட் கலவையை செய்து தட்டில் வைத்து அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் கட்லெட்டை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் கட்லெட்டை எடுத்து பக்குவமாக போட்டு அதை பொரிக்கவும்.
  • பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பீட்ரூட் கட்லெட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment