ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்

By Praveen Kumar
ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான ஒரு உணவு ஆகும். பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது எளிதில் செய்து முடிக்க இவை கச்சிதமானது.

ஃப்ரைட் ரைஸ் உலகம் முழுவதும் பல கோடி மக்களால் விரும்பி சுவைக்கப்படும் ஒரு உணவு என்று எந்த ஒரு தயக்கமும் இன்றி நாம் கூறலாம். சமகாலத்தில் பலவிதமான ஃப்ரைட் ரைஸ்கள் உதயமாகிவிட்டன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வேற லெவல் சுவையில் இருக்கும் ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Broccoli Fried Rice
Broccoli Fried Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதில் செய்யக்கூடிய ஒரு மிக சுவையான உணவு. எந்த கைப்பக்குவமும் இல்லாதவர்கள் கூட இதை சுலபமாக முதல்முறையிலேயே சரியாக செய்து விடலாம். இந்த ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸை கட்டாயம் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசி, ப்ரோக்கோலி, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் மிளகு தூள், சோயா சாஸ், சில்லி சாஸ் போன்ற சுவையூட்டிகளுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கலந்து வெந்து அற்புதமான மணம் மற்றும் சுவையை கொடுக்கும். நீங்கள் இதை செய்து முடித்த உடனே உங்கள் வீட்டில் இருப்பவர்களை இதனின் மணமே கிச்சனுக்கு கூட்டி வந்துவிடும். அதற்கு நாங்கள் கேரண்டி.

சில குறிப்புகள்:

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

ஃப்ரைட் ரைஸ் முதல் முதலாக 589 – 618 AD யில் சைனாவை சார்ந்த Sui சாம்ராஜ்ஜியத்தில் செய்யப்பட்டதாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஃப்ரைட் ரைஸ் உணவுகளை வீணடிப்பதை தவிர்க்க முயன்ற போது கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. சைனாவில் உதயமான இவை இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலமான ஒரு உணவாக திகழ்கிறது. ஃப்ரைட் ரைஸ்ஸை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு செய்முறையை பின்பற்றி மக்கள் செய்து சுவைக்கிறார்கள். அதை வெவ்வேறு பேர் கொண்டு அழைக்கிறார்கள். சிங்கப்பூரில் இதை Nasi goreng என்று, தாய்லாந்தில் இதை Khao phat என்று, ஈக்குவேடாரில் இதை Chaulafan என்று, பெருவில் இதை Arroz chaufa என்று, கியூபாவில் இதை Arroz frito என்று, மற்றும் போட்டோ ரிக்கோ நாட்டில் இதை Arroz mamposteao என்றும் அழைக்கிறார்கள்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸை முழுமையாக சுமார் 35 நிமிடத்தில் இருந்து 40 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் இரண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுட வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் ப்ரோக்கோலியில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் K மற்றும் C உள்ளது. இவை இதயம் மற்றும் கண்களுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் பீன்ஸில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் B 6 உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

நாம் இதில் சேர்க்கும் குடை மிளகாயில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

Broccoli Fried Rice
No ratings yet

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ் ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான ஒரு உணவு ஆகும். பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது எளிதில் செய்து முடிக்க இவை கச்சிதமானது.
Prep Time15 minutes
Cook Time20 minutes
Total Time35 minutes
Course: Main Course
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 2 cups ப்ரோக்கோலி
  • 1/4 cup பீன்ஸ்
  • 1 கேரட்
  • 1 வெங்காயம்
  • 1/2 பச்சை குடை மிளகாய்
  • 1/2 சிவப்பு குடை மிளகாய்
  • 2 tsp பூண்டு
  • 2 tsp மிளகு தூள்
  • 2 tsp சோயா சாஸ்
  • 1 tsp சில்லி சாஸ்
  • 1/4 எலுமிச்சை சாறு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எள் எண்ணெய்
  • தேவையான அளவு வெங்காய தாள்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ப்ரோக்கோலி, பீன்ஸ், கேரட், வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, வெங்காய தாளை நறுக்கி, மற்றும் எலுமிச்சை சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைக்காண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து சில் செய்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எள் எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், மற்றும் குடை மிளகாய், சேர்த்து அதை சுமார் ரெண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  • ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ப்ரோக்கோலி, ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு, மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் சோயா சாஸ் மற்றும் சில்லி சாஸை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு காய்கறிகள் நன்கு வேகும் வரை அதை வதக்கவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசி மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு மிளகு தூளை சேர்த்து சாதம் உடைந்து விடாமல் அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக கிளறி விட்டு சுமார் ரெண்டு நிமிடம் வரை வதக்கவும். (உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்).
  • ரெண்டு நிமிடத்திற்க்குப் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸை நாம் செய்ய கட்டாயம் எள் எண்ணெய்யை தான் பயன்படுத்த வேண்டுமா?

அப்படியெல்லாம் கிடையாது நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் எண்ணெய்யையே பயன்படுத்திக் கொள்ளலாம். எள் எண்ணெய் மற்ற எண்ணெய்களை விட சற்று ஆரோக்கியமானது என்பதினால் அதை பயன்படுத்தினால் நல்லது.

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸில் நாம் காய்கறிகளுடன் மஷ்ரூமையோ அல்லது பன்னீரையோ சேர்த்துக் கொள்ளலாமா?

உங்களுக்கு மஷ்ரூம் அல்லது பன்னீர் பிடிக்கும் என்றால் நீங்கள் தாராளமாக அதை சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸில் நாம் முட்டையை சேர்க்கலாமா?

உங்களுக்கு முட்டை பிடிக்கும் என்றால் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். நாம் காய்கறி கலவைகளுடன் பாசுமதி அரிசியை சேர்த்த பிறகு உங்களுக்கு தேவையான அளவு முட்டையை உடைத்து ஊற்றி முட்டை வேகும் வரை சாதத்தை கிளறி கொள்ளவும்.

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்ஸை இன்னும் காரமாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் அதிகம் வேண்டுமென்றால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மேஜைகரண்டி அளவு மிளகு தூளை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக ஒரு மேஜைகரண்டி அளவு சில்லி சாஸை சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலி ஃப்ரைட் ரைஸ்க்கு ஏற்ற சைடிஷ்கள் என்னென்ன?

 

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment