ஓட்ஸ் கட்லெட்

By Praveen Kumar
பொதுவாக நாம் சாயங்காலங்களில் பிஸ்கெட் அல்லது கடைகளில் வாங்கும் பிராசஸ்டு புட் செய்தான் நாம் மற்றும் நம் குழந்தைகளும் உண்கிறோம். அதற்கு மாற்றாக நாம் வீட்டிலேயே அருமையான மற்றும் சத்தான இந்த ஓட்ஸ் கட்லெட்டை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

ஈவினிங் ஸ்னாக்ஸ் என்றாலே ஏதாவது வித்தியாசமாக உண்ண வேண்டும் என்று நம்மில் பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கும். அவ்வாறு இருக்கையில் நாம் வழக்கமாக உண்ணும் வடை சமோசா அல்லது போண்டாக்களுக்கு பதிலாக இந்த வித்தியாசமான ஓட்ஸ் கட்லெட்டை செய்து சுவைத்து மகிழலாம்.

பொதுவாக நாம் சாயங்காலங்களில் பிஸ்கெட் அல்லது கடைகளில் வாங்கும் பிராசஸ்டு புட் செய்தான் நாம் மற்றும் நம் குழந்தைகளும் உண்கிறோம். அதற்கு மாற்றாக நாம் வீட்டிலேயே அருமையான மற்றும் சத்தான இந்த ஓட்ஸ் கட்லெட்டை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

அவர்களுடன் சேர்ந்து நாமும் உண்டு மகிழலாம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்கும் ஒரு சுவாரசியமான கட்லெட்டின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Oats Cutlet
Oats Cutlet

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்: 

பொதுவாக நாம் அனைவரும் சாதா கட்லெட்டுகளை பலமுறை செய்து உண்டு இருப்போம். அதற்கு பதிலாக இம்முறை நீங்கள் வித்தியாசமான மற்றும் சத்தான இந்த ஓட்ஸ் கட்லெட்டை முயற்சி செய்து பார்க்கலாம். அதுமட்டுமின்றி காய்கறிகளை தனியாக கொடுத்தால் சில குழந்தைகள் உண்ண அடம் பிடிப்பார்கள். அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். மொறுமொறுப்பான இந்த ஓட்ஸ் கட்லெட்டை நீங்கள் அவர்களை கேட்க கூட வேண்டாம் அவர்களே இதை மிகவும் விரும்பி உண்பார்கள். மேலும் இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்: 

ஓட்ஸ் கட்லெட்டின் மேலே இருக்கும் அந்த மொறு மொறுப்பு தன்மையும் அதோடு உள்ளே இருக்கும் மசாலாவும் அருமையான காம்பினேஷனாக இருக்கும். அது மட்டும் இன்றி இந்த மசாலாவில் இருக்கும் உருளைக்கிழங்கு, வேகவைத்த பச்சை பட்டாணி, குடமிளகாய், மற்றும் கடலை மாவு கலவை ஒரு மறக்க முடியாத அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தும்.

சில குறிப்புகள்: 

எண்ணெய்யை நீங்கள் அதிகம் விரும்பாதவர் என்றால் கட்லெட்டை டீப் ஃப்ரை செய்வதற்கு பதிலாக கட்லெட்டை அவித்து விட்டு பின்பு ஏர் ஃப்ரை செய்து கொள்ளலாம்.

மாவில் தண்ணீர் அதிகமாக இருந்து கட்லெட் பிடிக்க வரவில்லை என்றால் கொஞ்சம் ஓட்ஸ்ஸை போட்டு ஈரப்பதத்தை குறைத்து விடலாம்.

இவ் உணவின் வரலாறு:

கட்லெட் ஒரு பிரெஞ்சு உணவு முறை ஆகும். பதினாறாம் நூற்றாண்டின் போது இவை பிரான்ஸ் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பியர்கள் இந்திய படையெடுப்பின் போது போர்ச்சுகீசியர்களால் கட்லெட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்திய உணவு முறைகேற்ப கட்லெட் பல்வேறு வடிவங்கள் பெற்று பல செய்முறை விளக்கங்களோடு செய்யப்பட்டு வருகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

கடலைப்பருப்யை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

ஓட்ஸ் கட்லெட் செய்யு முன் தயாரிப்பு நேரமாக சுமார் 15 லிருந்து 20 நிமிடம் எடுக்கும்.

ஓட்ஸ் கட்லெட்டை சமைக்க சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.

ஓட்ஸ் கட்லெட்டை சுமார் 35 லிருந்து 40 நிமிடத்திற்குள் முழுமையாக செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

ஓட்ஸ் கட்லெட்டை ஒரு நாள் பிரிட்ஜில் வைத்து உண்ணலாம். எனினும் அன்றே சாப்பிட்டு விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்: 

  • சிக்கன் கட்லெட்
  • ஃபிஷ் கட்லெட்
  • மட்டன் கட்லெட்
  • மஸ்ரூம் கட்லெட்
  • வெஜிடபிள் கட்லெட் 
  • பன்னீர் கட்லெட்

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

ஓட்ஸ் கட்லெட் செய்ய பயன்படுத்தும் ஓட்ஸில் புரத சத்து, நார் சத்து, தண்ணி சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது.

நாம் சேர்க்கும் கடலைப்பருப்பில் புரத சத்து, நார் சத்து, மற்றும் விட்டமின் B உள்ளது.

நாம் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, விட்டமின் K மற்றும் A உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

நாம் சேர்க்கும் குடமிளகாயில் விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை இதயம், கண், மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

Oats Cutlet
No ratings yet

ஓட்ஸ் கட்லெட்

பொதுவாக நாம் சாயங்காலங்களில் பிஸ்கெட் அல்லது கடைகளில் வாங்கும் பிராசஸ்டு புட் செய்தான் நாம் மற்றும் நம் குழந்தைகளும் உண்கிறோம். அதற்கு மாற்றாக நாம் வீட்டிலேயே அருமையான மற்றும் சத்தான இந்த ஓட்ஸ் கட்லெட்டை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup ஓட்ஸ்
  • 1/4 cup கடலைப்பருப்பு
  • 1/4 cup பச்சை பட்டாணி
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 1 கேரட்
  • 1/4 cup குடமிளகாய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1 tsp ஆம்சூர் தூள்
  • 1 tsp சீரகத்தூள்
  • 1 tsp கரம் மசாலா
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp உப்பு
  • 1/2 tsp மஞ்சள்த்தூள்
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் கடலைப்பருப்பை சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு கழுவி ஊற வைக்கவும்.
  • ஒரு மணி நேரம் கழித்து நாம் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு, மற்றும் பச்சை பட்டாணியை சுமார் 25 நிமிடம் வரை அவித்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து நாம் வேக வைத்த காய்கறிகள் மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை அனைத்தையும் அதில் போட்டு அதனுடன் ஓட்ஸ்ஸை போடவும்.
  • பின்பு அதில் மஞ்சள்த்தூள், மிளகாய் தூள், ஆம்சூர் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மற்றும் உப்பை சேர்த்து உருளைக்கிழங்கு நன்கு மசியும் வரை அதை பிணைந்து சுமார் ஐந்து நிமிடம் வரை அதை ஊற வைக்கவும்.
  • ஐந்து நிமிடம் கழித்து கைகளில் சற்று எண்ணெய்யை தடவி மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கட்லெட்டுகளாக தட்டி வைக்கவும்.
  • இப்பொழுது ஒரு pan ஜ எடுத்து அடுப்பில் வைத்து அதில் 2 tsp அளவு எண்ணெய் விட்டு அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் ஒவ்வொன்றாக நாம் பிடித்து வைத்திருக்கும் கட்லெட்டுகளை பக்குவமாக அதில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.
  • அது பொன்னிறமானதும் கட்லெட்டுகளை திருப்பிப் போடவும்.
  • கட்லெட் வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்: 

ஓட்ஸ் கட்லெட்டில் வேறு ஏதேனும் காய்கறிகளை நாம் பயன்படுத்தலாமா?

தாராளமாக பயன்படுத்தலாம். அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பீன்ஸ், பீட்ரூட், மற்றும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை நாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் கட்லெட்டுக்கு உகந்த சட்னிகள் எவை?

தேங்காய் சட்னி, புதினா சட்னி, மற்றும் வெங்காய சட்னி இதில் ஏதேனும் ஒரு சட்னியில் ஓட்ஸ் கட்லெட்டை தொட்டு சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். நமக்கு விருப்பம் என்றால் டொமேட்டோ கெட்சப்பையும் நாம் பயன்படுத்தலாம்.

ஓட்ஸ் கட்லெட்டை மேலும் ஸ்பைசியாக மாற்றுவது எப்படி?

நாம் சேர்க்கும் மூன்று பச்சை மிளகாய் களுடன் கூடுதலாக காரத்திற்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment