முட்டை உருளைக்கிழங்கு பொரியல்

By Praveen Kumar
மற்ற பொரியல்களுக்கு ஒரு நல்ல மாற்றாக இந்த வித்தியாசமான முட்டை உருளைக்கிழங்குபொரியல் இருக்கும்.

பொதுவாக நாம் உருளைக்கிழங்கை தனியாக பல விதமாக செய்து சுவைத்திருப்போம். அதே போன்று முட்டையையும் பல விதமாக செய்து சுவைத்திருப்போம். முட்டை மற்றும் உருளைக்கிழங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. அந்த இரண்டையும் கொண்டு ஒரு உணவாக செய்தால் அது எப்படியிருக்கும்? அதைத்தான் நாம் இன்று இங்கு காண இருக்கிறோம்.

முட்டை உருளைக்கிழங்கு பொரியலின் ஸ்பெஷல் என்னவென்றால் இது நாம் செய்யும் மத்த பொரியல்களை போன்றே எந்த ஒரு கடினமான செய் முறையையும் பின்பற்றாமல் வெகு எளிதாக செய்து விடலாம். இன்னும் சொல்லப் போனால் அவைகளை விட இதை நாம் சுலபமாக சமைத்து விடலாம். மேலும் அதிகமான பொருட்கள் இன்றி வெறும் உருளைக்கிழங்கு, முட்டை, மற்றும் வீட்டிலிருக்கும் மசாலாக்களை கொண்டே இதை நாம் செய்து விடலாம்.

Potato Egg Poriyal

நாம் பொதுவாக பல பொரியல்களை சாதத்திற்கு சைட் டிஷ் ஆக செய்து உண்டு இருப்போம். அந்த வகையில் மற்ற பொரியல்களுக்கு ஒரு நல்ல மாற்றாக இந்த வித்தியாசமான முட்டை உருளைக்கிழங்கு பொரியல் இருக்கும். மேலும் இதை வெறுமனேவும் மாலை நேர டிஃபனாகவும் நாம் உண்ணலாம். எனினும் இதில் வாயு ஏற்படுத்தும் தன்மை சிறிது அதிகமாக இருப்பதினால் இதை ஒரே நேரத்தில் அதிகம் உட்கொள்வதை நாம் தவிர்ப்பது நல்லது.

இப்பொழுது கீழே முட்டை உருளைக்கிழங்கு பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Potato Egg Poriyal
5 from 1 vote

முட்டை உருளைக்கிழங்கு பொரியல்

மற்ற பொரியல்களுக்கு ஒரு நல்ல மாற்றாக இந்த வித்தியாசமான முட்டை உருளைக்கிழங்குபொரியல் இருக்கும்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: South Indian, Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • ¼ மேஜைக்கரண்டி கடுகு
  • ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • ½ மேஜைக்கரண்டி கடலை பருப்பு
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ மேஜைக்கரண்டி சிக்கன் மசாலா
  • ½ மேஜைக்கரண்டி கறி மசாலா
  • ½ மேஜைக்கரண்டி சாம்பார் தூள்
  • ½ மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை போட்டு அதை வறுக்கவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.
  • தக்காளி நன்கு மசிந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, கறி மசாலா, சாம்பார் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • மசாலாக்களின் பச்சை வாசம் போனதும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும். (சுமார் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.)
  • 5 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் தண்ணீர் வற்றி அது நன்கு கிரேவியாக இருக்கும் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதை சுமார் 2 நிமிடம் வரை அப்படியே இருக்க விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அந்த முட்டைகளை உடைத்து விட்டு அது நன்கு உருளைக்கிழங்கு கிரேவியுடன் சேருமாறு அதை கிளறி விட்டு தண்ணீர் வற்றும் வரை அதை வதக்கவும்.
  • பின்பு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை உருளைக்கிழங்கு பொரியல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment