கத்திரிக்காய் சாதம்

By Praveen Kumar
கத்திரிக்காய் சாதம் தென்இந்தியாவில் ஒரு பிரபலமான உணவு. மணமான மற்றும் சுவையான இந்த கத்திரிக்காய் சாதம் உங்களுக்கு ஒரு அற்புதமான உணவு உண்ணும் அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான கத்திரிக்காய் சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான கத்திரிக்காய் சாதத்தின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Eggplant Rice
Eggplant Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக நாம் அலுவலகங்களுக்கு செல்லும்போது அல்லது நம் பிள்ளைகளுக்கு மதிய உணவாக சாம்பார் சாதமோ அல்லது தக்காளி சாதமோ அல்லது எலுமிச்சை சாதமோ நாம் பல முறை செய்து கொடுத்து இருப்போம். இல்லை. செய்தே அலுத்து போய் இருப்போம் என்றாலும் அது மிகை ஆகாது. அவ்வாறு இருக்கையில் நமக்கு இந்த கத்திரிக்காய் சாதம் ஒரு வரப்பிரசாதம். இதை கட்டாயம் நீங்கள் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

கத்திரிக்காய் சாதம் செய்வதற்கு நாம் முதலில் ஸ்பெஷலான ‘வாங்கிபாத் மசாலா பொடி’ என்கின்ற பொடியை தயாரிக்க வேண்டும். இந்த பொடியை நாம் மிளகாய், மல்லி விதைகள், சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், புளி, மற்றும் பெருங்காயத்தை கொண்டு  தயாரிப்போம். இந்தப் பொடியில் தான் இந்த அருமையான கத்திரிக்காய் சாதத்திற்கான மேஜிக்கே இருக்கிறது. இந்தப் பொடியுடன், கத்திரிக்காய் மற்றும் சாதம் நன்கு ஒன்றோடு ஒன்று ஒன்றி மிகக் கச்சிதமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

கத்திரிக்காயை நறுக்கியவுடன் தண்ணீரில் போட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும்.

கத்திரிக்காய் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் கத்திரிக்காய் நன்கு இளசாக பார்த்து தேர்ந்தெடுத்தால் சாதம் மிகவும் அற்புதமாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

கத்திரிக்காய் சாதம் இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மைசூர் நகரில் உதயமானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவில் இதை ‘Vangi Bath’ என்றுதான் அழைக்கிறார்கள். கர்நாடகாவில் உதயமான இவை மெல்ல மெல்ல காலப்போக்கில் இந்தியா முழுவதும் இன்று பிரபலமடைந்து இருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

கத்திரிக்காய் சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 35 லிருந்து 45 நிமிடம் எடுக்கும்.

கத்திரிக்காய் சாதத்தை முழுமையாக சுமார் 55 நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

கத்திரிக்காய் சாதத்தை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

கத்திரிக்காய் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் கத்திரிக்காயில் புரத சத்து, நார் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

நாம் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் விட்டமின் B இருக்கிறது. இவை இருதய, பல், மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இருதயம், கிட்னி, எலும்பு, மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் வறுத்த வேர்க்கடலையில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இதய ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்புக்கான டயட்டில் மிகவும் உதவியாக இருக்கும்.

இதில் நாம் சேர்க்கும் மிளகில் புரத சத்து, நார் சத்து, கால்சியம், இரும்பு சத்து, மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. இவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் நார் சத்து, புரத சத்து,  இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, சிங்க், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண், மற்றும் கிட்னி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

 

Eggplant Rice
No ratings yet

கத்திரிக்காய் சாதம்

கத்திரிக்காய் சாதம் தென்இந்தியாவில் ஒரு பிரபலமான உணவு. மணமான மற்றும் சுவையான இந்த கத்திரிக்காய் சாதம் உங்களுக்கு ஒரு அற்புதமான உணவு உண்ணும் அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
Prep Time15 minutes
Cook Time45 minutes
Total Time1 hour
Course: Main Course
Cuisine: Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 1 cup அரிசி
  • 300 g கத்திரிக்காய்
  • 10 காய்ந்த மிளகாய்
  • 3 tsp கடலை பருப்பு
  • 2 tsp உளுத்தம் பருப்பு
  • 2 tsp கொத்தமல்லி விதைகள்
  • 1/2 tsp கடுகு
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • 1/2 tsp பெருங்காய தூள்
  • 2 ஏலக்காய்
  • 4 கிராம்பு
  • 1 இலவங்கப்பட்டை
  • 2 சிறு துண்டு புளி
  • 1 கை அளவு துருவிய தேங்காய்
  • 1 tsp வெள்ளம்
  • 1 கை அளவு வறுத்த வேர்க்கடலை
  • தேவையான அளவு கருவேப்பிலை
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து கத்திரிக்காய், கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சாதம் வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் சாதத்தை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது வாங்கிபாத் மசாலா பொடியை செய்வதற்கு ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உளுத்தம் பருப்பு சேர்த்து அதை சுமார் இரண்டு நிமிடம் வரை வறுக்கவும்.
  • ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் எட்டு காய்ந்த மிளகாய், மல்லி விதைகள், சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் புளியை சேர்த்து அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வறுக்கவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து அதை நன்கு சுமார் அரை நிமிடம் வரை வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு அதை ஒரு தட்டில் பரப்பி விட்டு ஆறவிடவும்.
  • மசாலா பொருட்கள் நன்கு ஆறியவுடன் அதை ஒரு மிக்ஸி ஜாரிற்கு மாற்றி அதனுடன் அரை மேஜைகரண்டி அளவு பெருங்காயம் மற்றும் வெள்ளத்தை சேர்த்து அதை நன்கு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒன்றரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு மேஜைகரண்டி அளவு கடலை பருப்பு, ஒரு மேஜைகரண்டி அளவு உளுத்தம் பருப்பை, மற்றும் கடுகு சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் வேர்க்கடலை, ரெண்டு காய்ந்த மிளகாய், ஒரு சிட்டிகை பெருங்காயம், மற்றும் கொஞ்சம் கருவேப்பிலையை சேர்த்து வேர்க்கடலை சற்று நிறம் மாறும் வரை அதை வறுக்கவும்.
  • வேர்க்கடலை சற்று நிறம் மாறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் ரெண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  • ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் ஒரு மேஜைகரண்டிய அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் வாங்கிபாத் மசாலா பொடியில் இருந்து சுமார் நான்கு மேஜைகரண்டி அளவு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை சுமார் பத்து நிமிடம் வரை வதக்கவும்.
  • பத்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அதை கிளறி விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்).
  • இப்பொழுது அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு நெய்யை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விடவும்.
  • அவ்வளவுதான் உங்களின் மணமான மற்றும் அற்புதமான கத்திரிக்காய் சாதம் தயார்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

கத்திரிக்காய் சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் புழுங்கள் அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாமா?

உங்களுக்கு பாசுமதி அரிசி பிடிக்கும் என்றால் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு சீரக சம்பா அரிசி விருப்பம் என்றால் அதையும் பயன்படுத்தி கொள்ளலாம். பச்சரிசியை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

கத்திரிக்காய் சாதம் செய்ய நாம் கத்திரிக்காயுடன் வேறு ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?

வேறு எந்த காய்கறிகளும் கத்திரிக்காய் உடன் நல்ல காம்பினேஷனாக இருக்காதே. உங்களுக்கு கட்டாயம் வேறு ஏதேனும் சேர்க்க வேண்டும் என்றால் கருப்புக் கொண்டை கடலையை வேகவைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

கத்திரிக்காய் சாதத்திற்க்கு ஏற்ற சைடிஷ்கள் என்னென்ன?

உருளைக்கிழங்கு பொரியல், பச்சை பட்டாணி பொரியல், வெண்டைக்காய் பொரியல் போன்றவை நன்றாக இருக்கும். வருத்த உருளைக்கிழங்கு சிப்ஸ் கத்திரிக்காய் சாதத்திற்க்கு படுக்கச்சிதமாக இருக்கும்.

கத்திரிக்காய் சாதத்தை இன்னும் கூடுதலாக காரமாக ஆக்குவது எப்படி?

நாம் சேர்க்கும் பத்து காய்ந்த மிளகாய்களே சரியாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கூடுதல் காரம் தேவை என்றால் கூடுதலாக இரண்டில் இருந்து மூன்று காய்ந்த மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment