சிக்கன் கொத்து பரோட்டா

By Praveen Kumar
தமிழகம் முழுவதும் கொத்து பரோட்டா பிரபலமாக இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி.

கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு உணவு வகை அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. தமிழகத்தில் உள்ள மதுரையை பிறப்பிடமாகக் கொண்ட இவை கேரளாவில் வீச்சு பரோட்டா என்று அழைக்கப்படுகிறது. என்ன தான் தமிழகம் முழுவதும் கொத்து பரோட்டா பிரபலமாக இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி.

மதுரையில் மிகவும் பிரசித்தி வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்து மட்டன் தோசை மற்றும் கொத்து பரோட்டா தான் ஃபேமஸ். இளைஞர் பட்டாளம் மத்தியில் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் கொத்து பரோட்டாவிற்கு என ஒரு தனி வரவேற்பு உண்டு. அதனாலேயே தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரையில் இருக்கும் அனைத்து உணவகங்களிலும் கொத்து பரோட்டா கட்டாயம் கிடைக்கும்.

Chicken Kothu Parotta

கொத்து பரோட்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் 2 அல்லது 3 பரோட்டாக்கள் மற்றும் முந்தைய நாள் செய்த மீதமுள்ள சிக்கன் துண்டுகள் இருந்தால் போதும் இதை மிக எளிதாக செய்து விடலாம். மேலும் மீதமுள்ள சிக்கன் துண்டுகள் வீணாகாமல் இருப்பது மட்டுமின்றி அதை வித்தியாசமான முறையில் கொத்து பரோட்டாவாக செய்து சுவைக்கலாம்.

இப்பொழுது கீழே சிக்கன் கொத்து பரோட்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Kothu Parotta
5 from 1 vote

சிக்கன் கொத்து பரோட்டா

தமிழகம் முழுவதும் கொத்து பரோட்டா பிரபலமாக இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் இதற்கு இருக்கும் மவுசே தனி.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Main Course
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 3 பரோட்டா
  • 12 to 15 சிக்கன் துண்டுகள்
  • 2 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 3 பூண்டு பல்
  • 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்
  • மிளகாய் தூள் தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டை நறுக்கி, சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு பரோட்டாவை கடையில் வாங்கியோ அல்லது வீட்டிலே செய்தோ அதையும் சிறு சிறு துண்டுகளாக கைகளின் மூலம் பிய்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு அதை நன்கு வதக்கவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து அதை நன்கு கிளறி தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் pan ன் நடுவே ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விட்டு அதை தக்காளியுடன் சேர்த்து கலந்து விடவும்.
  • அடுத்து அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு நன்கு கிளறி அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் பரோட்டாவை போட்டு நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட சால்னா உடனோ அல்லது சிக்கன் குழம்பு உடனோ பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் கொத்து பரோட்டா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

 

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment