மொச்சை சுண்டல்

By | Published , Last Updated: October 3, 2016 | Tamil, நவராத்திரி | No Comment

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்.
Mochai (Dried Broad Beans) Sundal

தேவையான பொருட்கள்

மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு – அரை டீஸ்பூன்

பொடி செய்ய:

புதினா – ஒரு கைப் பிடி

ஓமம் – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

ஓமம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, பின், புதினா சேர்த்து லேசாக வதக்கி பொடி செய்து கொள்ளவும்.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும்.

பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

Recipe in English

Please wait...

இந்த மொச்சை சுண்டல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 Navratri Sundal Varieties to Surprise Your Family
Read More
close-image

Stay Connected: