வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்

Tamil, நவராத்திரி 0 comments

நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்.
vella kondakadalai sundal - வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்

கொண்டைக் கடலை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

பொடி செய்ய:

சீரகம் – ஒரு டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின், அதில் அம்சூர் பவுடர் கலந்து கொள்ளவும்.

அம்சூர் பவுடர் – ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – இரண்டு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.

பிறகு, அதில் வேகவைத்த வெள்ளை கொண்ட கடலை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.

பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

Recipe in English

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*