மட்டன் சமோஸா

By | Published | Tamil | No Comment

mutton samosa

தேவையான பொருட்கள்

மைதா – 350 கிராம்

பேக்கிங் பௌடர் – 1/2 தேக்கரண்டி

கொத்துக்கறி – 250 கிராம்

பெரிய வெங்காயம் – 1

மல்லித்தழை – 1/2 கப்

புதினா இலை – 1/4 கப்

இஞ்சி – 1 அங்குலம்

பச்சை மிளகாய் – 4

உப்புத் தூள் – தேவையான அளவு

நெய் – 2 தேக்கரண்டி

தயிர் – 1 தேக்கரண்டி

தக்காளி – 1 பெரியது

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

செய்முறை

350 கிராம் மைதா மாவில் 1/2 தேக்கரண்டி பேக்கிங் பௌடரைக் கலந்து கொள்ளவும்.

250 கிராம் கொத்துக்கறியை வாணலியில் போட்டு, தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பெரிய வெங்காயம், 1/2 கப் அளவு மல்லித்தழை, 1/4 கப் புதினா இலை, 1 அங்குலம் இஞ்சி, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.

மைதா, பேக்கிங் பௌடரைச் சலித்த பின் தேவையான உப்புத் தூள், 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

1/2 மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடியும் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

ஒரு பெரிய தக்காளியை 1/2 கப் தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, இத்துடன் கரம் மசாலா 1 தேக்கரண்டி, மல்லித்தழை, புதினா இலையைக் கலந்து இறக்கிக் கொள்ளவும்.

கொத்துக்கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புத்தூள் மற்றும் தக்காளிக் கலவையையும் கலந்து கொள்ளவும்.

மாவு உருண்டைகளைப் பூரிப் பலகையில் வட்டங்களாகத் தேய்த்து ஒவ்வொரு வட்டத்தையும் 1/2 வட்டமாக செய்து அதை கோன் (cone) வடிவமாக அமைத்து, இதனுள் கொத்துக்கறி கலவையை வைத்து மூடவும். 1/2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

அதன்பின் வாணலியில் 2 கப் சமையல் எண்ணெய் ஊற்றி காய வைத்தக் கோன்களைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சட்னியுடன் பரிமாறலாம்.

image via flickr

Latest Food Blogs

Feel free to comment or share your thoughts on this மட்டன் சமோஸா Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter
Sign up to receive the latest recipes, kitchen tips as well as receive other site updates!
Subscribe
close-link

Stay Connected: