சிக்கன் டிக்கா

By | Published , Last Updated on | Tamil | No Comment

chicken tikka

தேவையான பொருட்கள்

போன்லெஸ் சிக்கன் – நானூறு கிராம்

தயிர் – நானூறு கிராம்

இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்

கருப்பு உப்பு – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – மூன்று டீஸ்பூன்

தனியாதூள் – மூன்று டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

கஸ்தூரி மேத்தி – அரை டீஸ்பூன்

சிகப்பு கலர் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது, கருப்பு உப்பு, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, கலர் பொடி, கஸ்தூரி மேத்தி பவுடர், போதுமான உப்பு சேர்த்து சிக்கனை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

மண்ணைப் பரப்பி அதன் மேல் ஒரு பெரிய மண்சட்டியில் கரிதுண்டுகளால் தணல் உருவாக்கவும்.

ஒரு இரும்பு கம்பியில் மசாலா கலந்த சிக்கன் துண்டுகளை சொருகி, தணலில் காட்ட வேண்டும்.

தேவையெனில் எண்ணையை சிறிது சிறிதாக அதன் மேல் ஊற்றி தணல் மேல் வைத்து தீயாமல் சுட வேண்டும்.

சிக்கன் டிக்காவை அடித்த முட்டை வெள்ளை கருவில் தோய்த்து மீண்டும் இரண்டு நிமிடங்கள் வைத்து சூடாக சாப்பிட்டால் சுவை அதிகமாக இருக்கும்.

image via flickr – http://www.flickr.com/photos/xpressbus/2201439040/

Latest Food Blogs

Feel free to comment or share your thoughts on this சிக்கன் டிக்கா Recipe from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: