பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி

By Praveen Kumar
சப்பாத்தி, நான்,மற்றும் ஃபிரைட் ரைஸ்களுக்கு சைடிஷ் ஆக உண்ணலாம். வெறுமனே ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் உண்ண இவைமிகவும் உகந்தது.

பன்னீர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு பொருள். அது மட்டுமின்றி பொதுவாக பன்னீர் கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பன்னீரை கொண்டு வித்தியாசமாக செய்யப்படும் பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி‌. இது பன்னீரை விரும்பி உண்பவர்களுக்கு மட்டுமின்றி கட்டாயமாக அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

பன்னீர் பேன் ஃப்ரை கிரேவியை நாம் சப்பாத்தி, நான், மற்றும் ஃபிரைட் ரைஸ்களுக்கு சைடிஷ் ஆக உண்ணலாம். வெறுமனே ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் உண்ண இவை மிகவும் உகந்தது. நாம் வழக்கமாக மாலை நேரங்களில் உண்ணும் சிற்றுண்டிகளுக்கு அல்லது டிபன்களுக்கு இவை ஒரு அருமையான மாற்று. மேலும் நம் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்களும் இதை விரும்பி உண்பார்கள்.

Paneer Gravy

பன்னீர் பேன் ஃப்ரை கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் பன்னீர் உணவுகள் உங்களுக்கு சலித்து போய் இருந்தால் இந்த பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி தான் நீங்கள் அடுத்து செய்ய வேண்டிய பன்னீர் சார்ந்த உணவாக இருக்க வேண்டும்.

இப்பொழுது கீழே பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Paneer Gravy
5 from 2 votes

பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி

சப்பாத்தி, நான்,மற்றும் ஃபிரைட் ரைஸ்களுக்கு சைடிஷ் ஆக உண்ணலாம். வெறுமனே ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவும் உண்ண இவைமிகவும் உகந்தது.
Prep Time30 minutes
Cook Time30 minutes
Total Time1 hour
Course: Side Dish
Cuisine: Indian, North Indian

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் பன்னீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 முட்டைகோஸ்
  • 1 குடை மிளகாய்
  • 8 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 2 மேஜைக்கரண்டி ஸ்செஷ்வான் சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி கெட்சப்
  • 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
  • ½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு ஸ்பிரிங் ஆனியன்

செய்முறை

  • முதலில் வெங்காயம், முட்டைகோஸ், குடை மிளகாய், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன் ஐ தயார் செய்து, பன்னீரை சதுர வடிவில் நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், சிறிதளவு உப்பு, மற்றும் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ஒன்றாக போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சேர்த்து அது நன்கு பன்னீரோடு ஒட்டுமாறு கலந்து விடவும்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பன்னீரை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் இந்த பன்னீரை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி வைத்து அதன் அனைத்து புறங்களிலும் பொன்னிறம் ஆகுமாறு அதை வறுக்கவும்.
  • பன்னீர் அனைத்து புறங்களிலும் பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 5 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, மற்றும் அரை கப் அளவு ஸ்ப்ரிங் ஆனியன் ஐ போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் குடை மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஸ்செஷ்வான் சாஸ், கெட்சப், ரெட் சில்லி சாஸ், கால் மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 50 ml அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • பன்னீர் பேன் ஃப்ரை சிறிது கிரேவியாக வேண்டும் என்றால் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கரைத்து இதில் சேர்த்து கொள்ளவும்.
  • பின்பு அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அந்த கலவையுடன் சேருமாறு கிண்டி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை உருக விடவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் முட்டைகோஸை போட்டு அதை ஒரு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விடவும்.
  • அடுத்து Sizzler Plate Tray வை எடுத்து அதை வெறுமனே அடுப்பில் வைத்து அது புகை வரும் அளவிற்கு அதை சுட வைக்கவும்.
  • பின்னர் Sizzler Plate Tray வில் இருந்து புகை வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் முட்டைகோஸை போட்டு அதை நன்கு பரப்பி விடவும்.
  • பிறகு நாம் செய்து வைத்திருக்கும் பன்னீர் கிரேவியை அதன் மேலே ஊற்றி சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பன்னீர் பேன் ஃப்ரை கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment