நவாபி உருளைக்கிழங்கு கறி

By Praveen Kumar

potato curry

தேவையான பொருட்கள்

சின்ன உருளைக்கிழங்கு – பத்து (பாதி வேகவைத்தது)

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

சோம்பு – அரை டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – மூன்று

தனியா – ஒரு டீஸ்பூன்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தேங்காய் துருவல் – கால் கப்

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – இந்து பல்

பச்சை மிளகாய் – மூன்று

தக்காளி விழுது – ஐந்து டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, மிளகு, சீரகம் காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதல் அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பிறகு, அதனுடன் இரண்டாவதாக அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின், தேவையான அளவு உப்பு, தக்காளி விழுது, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

பிறகு, வறுத்த உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

image via flickr

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment