காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து கட்லெட்களாக செய்து கொடுக்கலாம்.
Prep Time20 minutesmins
Cook Time20 minutesmins
Course: Appetizer, Snack
Cuisine: Indian
Keyword: appetizer, cutlet, evening snack, kids
Ingredients
3உருளைக்கிழங்கு
2கேரட்
4 to 5பீன்ஸ்
1/2கப் பச்சை பட்டாணி
1மீடியம் சைஸ் ஆனியன்
2பச்சை மிளகாய்
1/2கப் மைதா மாவு
1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
Bread Crumbsதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
1/4மேஜைக்கரண்டி மஞ்சள்த்தூள்
1/2மேஜைக்கரண்டி கரம் மசாலா
மிளகாய்த்தூள்தேவையான அளவு
உப்புதேவையான அளவு
கொத்தமல்லிதேவையான அளவு
மிளகுத்தூள்தேவையான அளவு
8 to 10முந்திரி
Instructions
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின்பு கேரட், பீன்ஸ், வெங்காயம், மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா மற்றும் அவரவர் தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் கால் கப் தண்ணீரை ஊற்றி காய்களை 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
2 அல்லது 3 நிமிடத்திற்கு பிறகு காய்கள் சிறிது வெந்ததும் அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். (இந்த கலவை நன்றாக மாவு மாதிரி இருக்க வேண்டும்.
இந்த கலவை தண்ணியாக இருந்தால் அதில் சிறிது bread crumbs ஐ சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.)
இந்த கலவை சிறிது ஆறியவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லி, மிளகுத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது கட்லெட் pieces தயார் செய்வதற்கு தேவையான bread crumbs, மற்றும் அரை கப் மைதா மாவில் தண்ணீர் விட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது செய்து வைத்திருக்கும் கட்லெட் மாவை உங்களுக்குப் பிடித்தமான வட்ட வடிவிலோ அல்லது ஹார்டின் வடிவிலோ தட்டி அதை மைதா மாவில் முக்கி பின்னர் bread crumbs ல் நன்கு இருபுறமும் புரட்டி போட்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சுட்டதும் இந்த கட்லெட் pieces pan ன் அளவுக்கேற்ப போடவும்.
ஒரு புறம் பொன்னிறமானதும் மற்றொரு புறம் திருப்பி விடவும்.
இரு புறமும் பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது அதன் மேலே சிறு பொரித்த முந்திரி துண்டுகளை வைக்கவும்.
இதை கெட்சப் அல்லது சட்னியோடு சேர்த்து பரிமாறலாம்.
இப்பொழுது உங்கள் சூடான சுவையான கட்லெட் தயார்.
இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.