வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது.
Course: Main Course
Cuisine: South Indian
Keyword: Vegetable Fried Rice
Ingredients
1கப் பாசுமதி ரைஸ்
2கேரட்
150கிராம் பீன்ஸ்
1/2கோஸ்மீடியம் சைஸ்
1குடை மிளகாய்
1 ஸ்பிரிங் ஆனியன்கையளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
1மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்
1மேஜைக்கரண்டி சோயா சாஸ்
1மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
8பூண்டு பல்
1பச்சை மிளகாய்
1வெங்காயம்
Instructions
ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து எடுத்து தண்ணீரை நன்கு வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்). பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் போடவும்.
பாசுமதி அரிசியை 15 லிருந்து 20 நிமிடம் வேக வைக்கவும். (முக்கால் பாகம் வேகும் அளவிற்கு.) சாதம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)
இப்பொழுது கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
நன்கு பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை மற்றும் வெங்காயத்தை அதில் போடவும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.
தேவையான அளவிற்கு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
காய்கறி வெந்ததும் ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து அதனுடன் சேர்க்கவும். சாதம் உடையாமல் மெதுவாக கவனமாக கிளறவும்.
பிறகு ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை கிளறவும்.
பின்பு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிது ஸ்பிரிங் ஆனியன் ஐ மேலே தூவி அலங்கரிக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான சுவையான வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் தயார். இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.