வட இந்திய chat களில் முக்கியமான ஒன்று பேல் பூரி. பேல் பூரியில் பல வகை உண்டு பேல் சேவ் பூரி, டாள் பேல் பூரி, மற்றும் சேவ் பப்படி chat அதில் குறிப்பிடத்தக்கது.
Prep Time15 minutesmins
Cook Time15 minutesmins
Course: Main Course, Snack
Cuisine: Indian, North Indian
Keyword: bhel puri
Ingredients
5 to 6பானி பூரி
3கப் பொரி
1/4கப் மிக்சர்
1/4கப் ஒமபொடி
1/4கப் வெல்லம்
1 வெங்காயம்
1தக்காளி
1உருளைக்கிழங்கு
1கேரட்
1/4கப் கொண்டை கடலை
4பச்சை மிளகாய்
1லெமன்
8 to 10புளி துண்டு
4 to 5பேரிச்சம்பழம்
1இஞ்சி துண்டு
1மேஜைக்கரண்டி வறுத்த கடலை
1மேஜைக்கரண்டி சாட் மசாலா
மிளகாய் தூள்தேவையான அளவு
உப்புதேவையான அளவு
1கை புதினா
1கை கொத்தமல்லி
Instructions
முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், மற்றும் பேரிச்சம்பழத்தை நறுக்கி, கொண்டை கடலை மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து உருளைக்கிழங்கை மசித்து வைத்து கொள்ளவும்,
அடுத்து வெல்லத்தைப் பொடித்து, லெமன் ஐ பிழிந்து, மற்றும் புளியை சுமார் 10 நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து அதனின் சாரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது பச்சை சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, ஒரு துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு அதனுடன் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை பாதி அளவு சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
பின்பு புளி சட்னி செய்வதற்கு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் புளியைக் கரைத்து எடுத்து வைத்திருக்கும் புளி தண்ணியை ஊற்றி சுட வைக்கவும்.
புளி தண்ணீர் சுட்டதும் அதில் பொடித்து வைத்திருக்கும் வெல்லம், நறுக்கி வைத்திருக்கும் பேர்ச்சம்பழம், அரை மேஜைக்கரண்டி அளவு மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.
தண்ணீர் வற்றி சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு இந்த புளி தண்ணியை ஆற விடவும்.
இது ஆறியவுடன் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு bowl ல் பொரி, மிக்சர், ஒமபொடி, வறுத்த கடலை, மற்றும் பானி பூரியை நொறுக்கிப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், 2 பச்சை மிளகாய், வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டை கடலை, மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, சாட் மசாலா, அரை மேஜைக்கரண்டி அளவு மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் அதில் நாம் செய்து வைத்திருக்கும் பச்சை சட்னி மற்றும் புளி சட்னியை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து, மீதமுள்ள எலுமிச்சை சாறையும் சேர்த்து, சிறிதளவு கொத்தமல்லியை தூவி நன்கு கிளறி ஒரு கிண்ணத்தில் போட்டு பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் வீட்டிலே செய்த பேல் பூரி சாட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.