ஸ்டாட்டர்ஸ் வகையை சேர்ந்த இந்த சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை.
Course: Soup
Cuisine: Indian
Keyword: soup
Ingredients
2கேரட்
10 to 12பீன்ஸ்
1கப் சோளம்
1/4கப் முட்டைகோஸ்
1/4கப் பெரிய வெங்காயம்
1மேஜைக்கரண்டி சோள மாவு
2பூண்டு பல்
மிளகுதூள்தேவையான அளவு
ஸ்பிரிங் ஆனியன்தேவையான அளவு
1மேஜைக்கரண்டி சோயாசாஸ்
சூப் ஸ்டிக்ஸ்தேவையான அளவு
உப்புதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
Instructions
முதலில் கேரட், பீன்ஸ், சோளம், பெரிய வெங்காயம், முட்டைகோஸ், மற்றும் பூண்டை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அரை கப் அளவு சோளத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பூண்டின் பச்சை வாசம் போனதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் சோளம் மற்றும் முட்டை கோசை அதில் போட்டு கிளறவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள சோளத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சூப் சிறிது திக்காக வருவதற்கே சோளத்தை அரைத்து சேர்க்கிறோம்.)
இப்பொழுது இந்த கலவையுடன் 5 கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை காய்கறிகளை வேக விடவும்.
20 நிமிடத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் காய்கறிகள் நன்றாக வெந்திருக்கும். (காய்கறிகள் வேகாமல் இருந்தால் இன்னும் ஒரு 4 அல்லது 5 நிமிடம் வேக விடவும்.)
சூப் தண்ணியாக இருந்தால் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கின்ற சூப்புடன் சேர்த்து கலக்கி இன்னும் ஒரு 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
3 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு மிளகுதூள் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
சூப்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நறுக்கி வைத்துள்ள ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு கலக்கு கலக்கி இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான வெஜிடபிள் சூப் தயார். இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூப் ஸ்டிக்ஸ்லோடு பரிமாறலாம்.
இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.