மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த வெஜிடபிள் புலாவ் மணமான மற்றும் சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட
Prep Time20 minutesmins
Cook Time30 minutesmins
Course: Main Course
Cuisine: South Indian
Keyword: dinner, Lunch, vegetable pulao
Ingredients
1/2கப் பாசுமதி அரிசி
1பெரிய வெங்காயம்
8 to 10பீன்ஸ்
1/2கப் பட்டாணி
1/2கப் காலிஃப்ளவர்
1கேரட்
3பச்சை மிளகாய்
நெய்தேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
2பிரியாணி இலை
1பட்டை
1ஸ்டார் பூ
3ஏலக்காய்
4கிராம்பு
8 to 10முந்திரி
1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
புதினாதேவையான அளவு
உப்புதேவையான அளவு
Instructions
முதலில் பாசுமதி அரிசியை எடுத்து நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி ஊருவதற்குள் கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய விடவும்.
நெய் நன்கு காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, ஸ்டார் பூ, கிராம்பு, ஏலக்காய், மற்றும் பட்டை சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் முந்திரி மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போடவும். பிறகு அதில் பச்சை மிளகாயையும், இஞ்சி பூண்டு பேஸ்ட்ஐயும் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், காலிபிளவர், மற்றும் பட்டாணி சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.
இரண்டு நிமிடம் வதங்கியதும் அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை போடவும். பின்பு அதில் 2 கப் தண்ணீர், சிறுது அளவு புதினா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நன்கு கலக்கிய உடன் அதில் ஒரு மூடியை போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். (தண்ணீர் வற்றி சாதம் உதிரி உதிரியாக வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.)
சாதம் வெந்ததும் அதை எடுத்து ஒரு பவுலில் வைத்து அதில் சிறிது கொத்தமல்லி தூவி கார்னிஷ் செய்யவும்.
இப்பொழுது உங்கள் சூடான சுவையான வெஜிடபிள் புலாவ் தயார். இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.