பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது.
Course: Side Dish
Cuisine: Indian, North Indian
Keyword: paneer butter masala
Ingredients
250கிராம் பன்னீர்
1கப் வெண்ணெய்
1 1/2வெங்காயம்
4தக்காளி
1 துண்டு இஞ்சி
3பல் பூண்டு
6 to 8 முந்திரி
1பிரியாணி இலை
2ஏலக்காய்
1பட்டை
1/2மேஜைக்கரண்டி கரம் மசாலா
மிளகாய்த்தூள்காரத்திற்கேற்ப
உப்புதேவையான அளவு
கசூரி மேத்திசிறிதளவு
1மேசைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீம்
Instructions
அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை மேசைக்கரண்டி வெண்ணெய்யை ஊற்றி கொள்ளவும்.
வெண்ணெய் உருகியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், மற்றும் 8 முந்திரிகளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
தக்காளி மென்மையாக வதங்கும் வரை கடாயை ஒரு தட்டால் மூடி வேக வைக்கவும்.
பின்பு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறியவுடன் வதக்கிய இந்த வெங்காயம் தக்காளியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்துக் கொள்ளவும்.
ஒரு pan ஐ அடுப்பில் வைத்து 4 மேசைக்கரண்டி வெண்ணெய்யை அதில் ஊற்றவும்.
வெண்ணெய் உருகிய உடன் அதில் பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 2, ஒரு பிரியாணி இலையை போடவும். அடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை அதில் ஊற்றவும்.
பின்பு அதில் ஒன்றரை மேசைக்கரண்டி கரம் மசாலா உடன் அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை போடவும். இறுதியாக உப்பை சேர்க்கவும்.
இந்த கிரேவியை நன்கு கிளறி மூடி வைக்கவும். ஏழிலிருந்து எட்டு நிமிடத்திற்கு மிதமான தீயில் வேகவிடவும்.
அதற்குள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
8 நிமிடத்திற்கு பிறகு pan ஐ திறந்து கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் பன்னீரை போட்டு கலந்து கொள்ளவும்.
பிறகு சிறிது கசூரி மேத்தி எடுத்து கசக்கி கிரேவி மீது தூவவும்.
கிரேவியை இறக்கும் முன்பு ஒரு மேஜைக்கரண்டி ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இப்பொழுது நீங்கள் விரும்பிய சூடான சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்.