இடியாப்பம் வயிற்றுக்கு உகந்தது. மேலும் தேங்காய் பால் உடம்புக்கு மிகவும் நல்லது.
Prep Time15 minutesmins
Cook Time15 minutesmins
Course: Breakfast, Snack
Cuisine: South Indian
Keyword: Idiyappam
Ingredients
1கப் பச்சரிசி மாவு
1/2கப் தேங்காய்
1/2மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
சர்க்கரைதேவையான அளவு
உப்புதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
Instructions
முதலில் ஒரு கப் அளவு பச்சரிசி மாவை எடுத்து ஒரு bowl ல் போட்டு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் 4 அல்லது 5 சொட்டு எண்ணெய் விட்டு கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதை எடுத்து bowl ல் இருக்கும் மாவில் சிறிது சிறிதாக ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் நன்கு பிரட்டி சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் அதை அப்படியே சுமார் 10 நிமிடம் வரை வைக்கவும்.
இப்பொழுது இடியாப்பத்தை பிழிந்து வைப்பதற்கு இடியாப்ப தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி தயார் செய்து கொள்ளவும்.
இடியாப்ப தட்டு இல்லாதவர்கள் நாம் வழக்கமாக இட்லி ஊற்றி வைக்கும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்து இடியாப்ப அச்சை எடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை உருட்டி அச்சின் அளவிற்கேற்ப உள்ளே வைத்து அவரவர் விருப்பத்திற்கேற்ற கணத்தில் இடியாப்பத்தை பிழிந்து விடவும்.
பின்பு இட்லி பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க விடவும்.
சரியாக தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது இடியாப்பத்தை பிழிந்து வைத்திருக்கும் தட்டுகளை அதன் உள்ளே வைத்து சரியாக சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.
10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு பக்குவமாக இடியாப்பங்களை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது தேங்காய் பால் செய்வதற்கு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து இந்த அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டி மூலம் அதிலிருக்கும் தேங்காய் பாலை பிரித்தெடுத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பின்பு இடியாப்பத்தை ஒரு தட்டில் வைத்து இந்த தேங்காய் பாலை ஊற்றி பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் உடம்புக்கு மிகவும் நன்மையான இடியாப்பம் தேங்காய் பால் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.