சங்கரா மீனில் குறைந்த அளவு கலோரி, உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, பொட்டாசியம், மற்றும் omega 3 fatty acids இருப்பதினால் இவை உடம்புக்கும் மிகவும் நல்லது.
Prep Time15 minutesmins
Cook Time15 minutesmins
Course: Main Course, Side Dish
Cuisine: Kerala, South Indian
Keyword: Sankara Meen
Ingredients
500gசங்கரா மீன்
5சின்ன வெங்காயம்
1தக்காளி
1கப் துருவிய தேங்காய்
2பச்சை மிளகாய்
1மேஜைக்கரண்டி கடுகு
1மேஜைக்கரண்டி மிளகு
1மேஜைக்கரண்டி வெந்தயம்
1மேஜைக்கரண்டி சீரகம்
3பூண்டு பல்
சிறிதளவு புளி
2மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
2 1/2மேஜைக்கரண்டி மல்லி தூள்
1/4மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
கருவேப்பிலைசிறிதளவு
எண்ணெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு
Instructions
முதலில் மீனை நன்கு கழுவி வைத்து, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தயார் செய்து, தேங்காய்யை துருவி, மற்றும் புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கடுகு, சீரகம், வெந்தயம், மற்றும் மிளகை போட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வறுக்கவும்.
அடுத்து அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் 3 பல் பூண்டை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
அடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதில் கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேஜைக்கரண்டி அளவு அரைத்து வைத்திருக்கும் மசாலா, மற்றும் ரெண்டரை மேஜைக்கரண்டி அளவு மல்லி தூள் சேர்த்து சரியாக ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் துருவி வைத்திருக்கும் தேங்காய் மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது மீண்டும் pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் பச்சை மிளகாயை போட்டு வதக்கி பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு கப் அளவு தண்ணீரை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
அடுத்து அதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணியை அதனுடன் சேர்த்து நன்கு கிண்டி விட்டு மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து பக்குவமாக கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.
7 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து சிறிதளவு கருவேப்பிலை தூவி பக்குவமாக ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரளா ஸ்டைல் சங்கரா மீன் குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.