கேரட் அல்வா பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் மிகவும் பிரபலம். இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று பஞ்சாபியர்கள் அழைக்கின்றார்கள்.
Prep Time15 minutesmins
Cook Time15 minutesmins
Course: Dessert
Cuisine: North Indian, South Indian
Keyword: carrot halwa, gajar halwa
Ingredients
3கப் துருவிய கேரட்
1கப் சர்க்கரை தலை தட்டி
1/4கப் பால் கோவா
1/2கப் நெய்
1மேஜைக்கரண்டி உலர் திராட்சை
1மேஜைக்கரண்டி முந்திரி
1மேஜைக்கரண்டி பாதாம்
1/2மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
எண்ணெய்தேவையான அளவு
Instructions
முதலில் கேரட்டை நன்கு பொடியாக துருவி, முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி, ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப்புக்கும் சிறிதளவு கூடுதலான நெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து முந்திரி லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாகத் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு நன்கு கிளறி அதன் பச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். (இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.)
கேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.
அடுத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யை இதில் சேர்த்து கிளறி விடவும்.
மிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். (அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும்.)
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.