சப்பாத்திகளை வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக சப்பாத்தி வெஜ் ரோல் ஆக செய்து கொடுக்கலாம்.
Prep Time15 minutesmins
Cook Time15 minutesmins
Course: Appetizer, Main Course, Snack
Cuisine: Indian
Ingredients
3கேரட்
2உருளைக்கிழங்கு
1பெரிய வெங்காயம்
8 to 10பீன்ஸ்
1குடை மிளகாய்
1தக்காளி
1கப் மைதா மாவு
1கப் கோதுமை மாவு
1மேஜைக்கரண்டி சீரகம்
1/2மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1/2மேஜைக்கரண்டி கரம் மசாலா
கெட்சப்தேவையான அளவு
மிளகாய் தூள்தேவையான அளவு
கொத்தமல்லிசிறிதளவு
உப்புதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
Instructions
முதலில் பீன்ஸ், கேரட், குடை மிளகாய், வெங்காயம், மற்றும் உருளைக்கிழங்கை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் சிறிதளவு உப்பை ஒன்றாக போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை பிணைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வதக்கவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு வதக்கவும். அடுத்து அதில் பீன்ஸ் மற்றும் கேரட்டை போட்டு வதக்கவும்.
பின்னர் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி சுமார் ஒரு நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
இப்பொழுது பிணைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து சப்பாத்திகளை போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து செய்து வைத்திருக்கும் சப்பாத்திகளில் ஒவ்வொன்றாக கெட்ச்சப்பை தடவி செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை சப்பாத்தியின் நடுவில் வைத்து உருட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் சத்தான சப்பாத்தி வெஜ் ரோல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.