ஃபிரைட் ரைஸ், நான், மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது வெஜிடபிள் மஞ்சூரியன்.
Course: Side Dish
Cuisine: Indian, South Indian
Keyword: vegetable manchurian gravy
Ingredients
1கப் துருவிய கேரட்
1கப் துருவிய முட்டை கோஸ்
10 to 12பீன்ஸ்
1பெரிய வெங்காயம்
1குடை மிளகாய்
2மேஜைக்கரண்டி மைதா மாவு
2மேஜைக்கரண்டி சோள மாவு
மிளகாய் தூள்தேவையான அளவு
மிளகு தூள்தேவையான அளவு
2பல் பூண்டு
1துண்டு இஞ்சி
1மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
1மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
1மேஜைக்கரண்டி சோயாசாஸ்
உப்புதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
வெங்காயத்தாள்சிறிதளவு
Instructions
முதலில் கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், வெங்காயம், குடை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு bowl ல் துருவிய கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், தேவையான அளவு மிளகாய் தூள், சிறிதளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மைதா மாவு மற்றும் சோள மாவை ஒன்றாக போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
அடுத்து இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (உருண்டை உடைந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடிக்கவும்.)
இப்பொழுது ஒரு வட சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை வட சட்டியின் அளவிற்கேற்ப போட்டு ஒரு பக்கம் பொன்னிறம் ஆனதும் மறுபக்கம் திருப்பி விட்டு பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போன பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை போட்டு சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.
3 நிமிடத்திற்கு பிறகு அதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ், மற்றும் சோயா சாஸ் ஐ சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். (கிரேவியாக வேண்டுமென்றால் ஒரு மேஜைக்கரண்டி சோள மாவில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.)
இப்பொழுது பொரித்து எடுத்து வைத்திருக்கும் உருண்டைகளை இதில் சேர்த்து பக்குவமாக உருண்டை உடைந்து விடாமல் கிளறி விடவும்.
சுமார் 2 நிமிடம் வரை இதை வேக விட்டு இறக்குவதற்கு முன் சிறிதளவு வெங்காயத் தாள்களை அதில் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜிடபிள் மஞ்சூரியன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.