Go Back
Print
Recipe Image
Smaller
Normal
Larger
5
from 1 vote
சர்க்காரா உப்பேரி
இந்த சக்கரா உப்பேரி அல்லது சக்கார வரதி பொதுவாக ஓணம் சத்யாவில் பரிமாறப்படுகிறது.
Prep Time
15
minutes
mins
Cook Time
15
minutes
mins
Course:
Side Dish
Cuisine:
Kerala
Ingredients
4
பெரிய வாழைக்காய்
3/4
கப்
வெல்லம் / வெல்லத்தூள்
1/2
டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்
1/4
டீஸ்பூன்
சுக்குத்தூள்
தேங்காய் எண்ணெய்
பொறிக்க தேவையான அளவு
1/2
டீஸ்பூன்
சீரகம் தூள்
Instructions
வாழைக்காயைத் தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் கனத்திற்கு அரை வட்டங்களாக நறுக்கி, தட்டில் பரப்பி 10 நிமிடங்கள் உலரவிடவும்.
வாணலியில் எண்ணையைக் காயவிட்டு வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, சத்தம் அடங்கும் வரை பொறுமையாக பொறித்தடுக்கவும்.
எண்ணெயை வடித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் சூடான வெந்நீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும்.
பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்கவைத்து ஒரு கம்பிப் பதத்திற்குப் பாகு காய்ச்சி இறக்கவும்.
அதனுடன் எல்லாக்காய்த்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும்.
பிறகு வாழைக்காய் சிப்ஸுடன் சேர்த்துக் கலக்கவும்.
ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, பொடித்த சர்க்கரைத் தூவலாம்.