Home Tamil சிக்கன் நக்கட்ஸ்

சிக்கன் நக்கட்ஸ்

0 comment
Published under: Tamil
வெகுஎளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நம் வீட்டிலேயே செய்யக்கூடியஒரு மாலை நேர சிற்றுண்டி.

நக்கட்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. நக்கட்ஸ்கலில் பல வகை உண்டு. அதில் முட்டை நக்கட்ஸ், வெஜிடபிள் நக்கட்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சிக்கன் நக்கட்ஸ். பொதுவாகவே நக்கட்ஸ்கலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த சிக்கன் நக்கட்ஸ்சும் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

சிக்கன் நக்கட்ஸ் (Chicken Nuggets)

சிக்கன் நக்கட்ஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு மாலை நேர சிற்றுண்டி. அது மட்டுமின்றி இவை நாம் மாலை நேரங்களில் வழக்கமாக செய்து உண்ணும் சிற்றுண்டிகளுக்கு ஒரு அருமையான மாற்றும் கூட. மேலும் நம் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.

இதை விரும்பி உண்பவர்கள் பெரும்பாலும் இதை chat shop களில் அல்லது ரெஸ்டாரன்ட்களில் தான் வாங்கி சுவைக்கிறார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது இதை நாம் வீட்டிலேயே ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் அதே சுவையில் சுகாதாரமான முறையில் செய்து சுவைக்கலாம் என்று.

இப்பொழுது கீழே சிக்கன் நக்கட்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

சிக்கன் நக்கட்ஸ் (Chicken Nuggets)
5 from 1 vote

சிக்கன் நக்கட்ஸ்

வெகுஎளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நம் வீட்டிலேயே செய்யக்கூடியஒரு மாலை நேர சிற்றுண்டி.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் boneless சிக்கன்
  • 2 முட்டை
  • 4 பிரட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்
  • ¼ மேஜைக்கரண்டி சோம்பு
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு புதினா
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரை மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கனை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் கலந்து வைத்திருக்கும் சிக்கன் கலவையை போடவும்.
  • பின்னர் அதில் ஒரு மூடி போட்டு அதை சுமார் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
  • 4 விசில் வந்த பின் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு bowl ல் கொட்டி அதை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு சிக்கனை கைகளின் மூலம் சிறு சிறு துண்டுகளாக பிய்த்து போட்டு வைத்து கொள்ளவும்.
  • பின்பு பிரட்டுகளை எடுத்து அதை மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster ரின் மூலமாகவோ toast செய்து அதை அரைத்து கொள்ளலாம்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் சோம்பு, கால் மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் கால் மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கன் மற்றும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லியை போட்டு ஒரு கிளறு கிளறி அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • அது ஆறிய பின் அதிலிருந்து சிக்கன் கலவையை எடுத்து அதை உருட்டி அவரவருக்கு விருப்பமான வடிவில் அதை தட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள சிக்கன் கலவைகளையும் தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு நாம் தட்டி வைத்திருக்கும் சிக்கனை எடுத்து இந்த முட்டையில் முக்கி நாம் செய்து வைத்திருக்கும் bread crumbs யில் போட்டு நன்கு பிரட்டி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள நக்கட்ஸ்களையும் செய்து ஒரு தட்டில் வைத்து அதை சுமார் 10 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த நக்கட்ஸ்களை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் நக்கட்ஸ்களை எடுத்து பக்குவமாக போட்டு பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட கெட்சப்புடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான சிக்கன் நக்கட்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter

©2024 – All Right Reserved. Awesome Cuisine

Awesome Cuisine - Quick and Easy Recipes