Home Tamil லெமன் ரைஸ்

லெமன் ரைஸ்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
லெமன் ரைஸ் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மதிய உணவு.

லெமன் ரைஸ் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மதிய உணவு. இவை என்ன தான் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் இதனின் பிறப்பிடம் கர்நாடக மாநிலம் தான் என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவை கன்னடத்தில் Chitranna என்று அழைக்கப்படுகிறது.

லெமன் ரைஸ் இல்லத்தரசிகள் மத்தியில் அதீத வரவேற்ப்பை பெற்றவையாகும். ஏனெனில் பெரும்பாலானோர் லெமன் ரைஸை தான் மதிய உணவாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் கணவன்மார்களுக்கு செய்து கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி இவை செய்வதற்கும் மிகவும் எளிமையானவையும் கூட.

Lemon Rice

இப்பொழுது கீழே லெமன் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Lemon Rice
5 from 1 vote

லெமன் ரைஸ்

லெமன் ரைஸ் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மதிய உணவு.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Breakfast, Main Course
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 2 எலுமிச்சம் பழம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 3 காஞ்ச மிளகாய்
  • 1 மேஜைக்கரண்டி கடுகு
  • 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
  • 2 மேஜைக்கரண்டி பச்சை கடலை
  • 1/4 மேஜைக்கரண்டி கால் மஞ்சள் தூள்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் ஒரு கப் அளவு அரிசியை எடுத்து நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்த பின்பு அதை வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, கடலையை வறுத்து, மற்றும் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் கடுகைப் போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கடலை பருப்பை போட்டு வறுக்கவும்.
  • அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் கடலையை போட்டு வதக்கவும்.
  • பின்னர் அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை ஊற்றி அதனுடன் மஞ்சள் தூளை தூவி நன்கு கிளறி அதை சுமார் ஒரு நிமிடம் வரை அப்படியே வதங்க விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு நாம் வடித்து வைத்திருக்கும் சாதத்தை எடுத்து இதில் சேர்த்து மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான லெமன் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

You can find the recipe for Lemon Rice in English here.

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter

©2024 – All Right Reserved. Awesome Cuisine

Awesome Cuisine - Quick and Easy Recipes