Home Tamil வெஜிடபிள் பப்ஸ்

வெஜிடபிள் பப்ஸ்

0 comment
Published under: Tamil
பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.

பப்ஸ், இவை ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. பப்ஸ்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் பப்ஸ், மட்டன் பப்ஸ், முட்டை பப்ஸ், ஃபிஷ் பப்ஸ், மற்றும் வெஜிடபிள் பப்ஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் இன்று இங்கு நாம் காண இருப்பது வெஜிடபிள் பப்ஸ். இவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு மாலை நேர சிற்றுண்டி. பெரும்பாலும் பப்ஸ் பிரியர்கள் பப்ஸ்சை பேக்கரியில் வாங்கி தான் சுவைக்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே பேக்கரிகளில் கிடைப்பதை விட ஆரோக்கியமாக செய்து நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Vegetable Puff Recipe

இப்பொழுது கீழே வெஜிடபிள் பப்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மட்டும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Vegetable Puff Recipe
5 from 2 votes

வெஜிடபிள் பப்ஸ்

பப்ஸ் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Snack
Cuisine: Indian, South Indian

Ingredients

  • 2 கப் மைதா மாவு
  • 1/2 கப் வெண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 கேரட்
  • 2 உருளைக்கிழங்கு
  • 5 to 6 பின்ஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • மிளகாய் தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து, 2 உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து, மற்றும் இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு bowl ல் மைதா மாவைக் கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு மாவாக பிணைந்து கொள்ளவும். (சுமார் முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றவும்.)
  • இப்பொழுது சப்பாத்தி தேய்க்கும் கல்லில் மாவை தூவி இந்த உருட்டிய மாவை இரண்டாக பிரித்து அதில் ஒவ்வொன்றாக வைத்து அதன் மேலே சிறிது மாவை தூவி நன்கு பெரிதாக தேய்த்து கொள்ளவும்.
  • பின்பு முதலில் தேய்த்து வைத்திருக்கும் மாவை கல்லில் வைத்து அதன் மேலே 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை போட்டு பக்குவமாக தேய்த்து கொஞ்சம் மைதா மாவை தூவி விடவும்.
  • பின்னர் இதன் மேலே இரண்டாவதாக தேய்த்த மாவை வைத்து மேலிருந்து ஒரு மடி கீழே இருந்து ஒரு மடியாக மடித்து மீண்டும் அதன் மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி சிறிது மைதா மாவை தூவி இடது புறத்திலிருந்து ஒரு மடி மற்றும் வலது புறத்தில் இருந்து ஒரு மடி மடிக்கவும்.
  • இப்பொழுது இந்த மாவை ஒரு கவரில் போட்டு சுமார் 40 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • 40 நிமிடத்திற்கு பிறகு எடுத்து மீண்டும் அதைத் சப்பாத்திக் கல்லில் வைத்து பக்குவமாக தேய்த்து அதன் மேல் வெண்ணெய்யை தடவி சிறிது மைதா மாவை தூவி மீண்டும் அதே போன்று மடித்து சுமார் 40 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • மீண்டும் 40 நிமிடத்திற்கு பிறகு எடுத்து 2 முறை செய்தது போன்றே மீண்டும் ஒரு முறை செய்து 40 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • 40 நிமிடத்திற்கு பிறகு இந்த மாவை எடுத்து சப்பாத்தி கல்லில் மைதா மாவை தூவி இதை வைத்து பப்ஸ்க்கு தேவையான அளவு அடர்த்தியாக தேய்த்து கொள்ளவும்.
  • பின்பு மாவின் ஓரங்களில் இருக்கும் மாவை ஒரு கத்தியின் மூலம் வெட்டி அதை செவ்வக வடிவிற்கு கொண்டு வரவும்.
  • அடுத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப பப்ஸ்யின் சைஸுக்கு ஏற்ப இந்த மாவை ஒரு கத்தியின் மூலம் துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும். (மீடியம் சைஸ் ஆக வெட்டினால் சுமார் 10 துண்டுகள் வரை வரும்.)
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் தட்டி வைத்திருக்கும் இஞ்சியை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் அதில் தக்காளி, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி சுமார் 2 லிருந்து 3 நிமிஷம் வரை அதை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி நன்கு கிளறி ஒரு நிமிடம் வரை வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  • பின்பு இதை நாம் வெட்டி வைத்திருக்கும் மாவு துண்டுகளின் நடுவில் வைத்து அதன் ஓரங்களில் தண்ணீரை தடவி மடித்து பப்ஸ்சை வேக வைக்க தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இவ்வாறே அனைத்து பப்ஸ்சையும் தயார் செய்த பின் இதை ஒரு தட்டில் வைத்து அதை ஓவனில் சரியாக 400 f வைத்து அதன் மேலே பொன்னிறம் ஆனதும் எடுக்கவும். (பாப்ஸ் பொன்னிறத்தை எட்டுவதற்கு 20 லிருந்து 25 நிமிடம் வரை எடுக்கலாம்.)
  • பப்ஸ் பொன்னிறம் ஆனதும் அதை வெளியே எடுத்து சுட சுட சட்னியோடு அல்லது கெட்சப் போடு பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜிடபிள் பப்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter

©2024 – All Right Reserved. Awesome Cuisine

Awesome Cuisine - Quick and Easy Recipes