மட்டன் கொத்து கறி

Tamil 0 comments

மட்டன் கொத்து கறிக்கு அறிமுகமே தேவையில்லை ஏனெனில் இவை தமிழகத்தில் அவ்வளவு பிரபலம். குறிப்பாக தமிழக கிராமப்புறங்களில் இதற்கு மவுசு அதிகம். சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்து கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது. பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு இவை ஒரு அசத்தலான சைடிஷ். ஆனால் பரோட்டா கொத்து கறி காம்பினேஷன் தான் பலரின் டாப் சாய்ஸாக இருக்கிறது. இதை சிலர் சிறிது கிரேவியாக சமைத்து சாதத்தில் குழம்பாக ஊற்றியும் உண்கிறார்கள்.

mutton kothu kari - மட்டன் கொத்து கறி

இப்பொழுது கீழே மட்டன் கொத்து கறி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

mutton kothu kari 380x380 - மட்டன் கொத்து கறி
0 from 0 votes

மட்டன் கொத்து கறி Recipe

சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்து கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது.
Prep Time20 mins
Cook Time20 mins
Course: Main Course
Cuisine: South Indian

Ingredients for மட்டன் கொத்து கறி

 • 1/2 கப் போன்லெஸ் மட்டன் கொத்து கறி
 • 2 பெரிய வெங்காயம்
 • 1 தக்காளி
 • 4 மேஜைக்கரண்டி தயிர்
 • 1/4 கப் துருவிய தேங்காய்
 • 5 பூண்டு பல்
 • 2 இஞ்சி துண்டு
 • 2 மேஜைக்கரண்டி சீராக தூள்
 • 3 மேஜைக்கரண்டி மல்லி தூள்
 • 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
 • எண்ணெய் தேவையான அளவு
 • 2 துண்டு பட்டை
 • 1 நட்சத்திர பூ
 • 1 பிரியாணி இலை
 • 1 மேஜைக்கரண்டி சீரகம்
 • 2 ஏலக்காய்
 • 3 கிராம்பு
 • 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
 • மிளகாய் தூள் தேவையான அளவு
 • 1 மேஜைக்கரண்டி கசகசா
 • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
 • 4 to 5 முந்திரி
 • நெய் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு
 • 1 கை கொத்தமல்லி

How to make மட்டன் கொத்து கறி

 • முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து, தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும்.
 • அடுத்து மட்டன் கொத்து கறியை எடுத்து நன்கு கழுவி ஒரு bowl ல் போட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டிலிருந்து 2 மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கிளறவும்.
 • பின்பு அதில் தயிர், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
 • அரை மணி நேரத்திற்குப் பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த ஊற வைத்து இருக்கும் கறியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சரியாக 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் பட்டை, நட்சத்திர பு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சீரகம் சேர்த்து வதக்கவும்.
 • பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்கு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
 • வெங்காயம் பொன்னிறம் ஆனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வதக்கவும்.
 • தக்காளி வதங்கியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டிலிருந்து ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
 • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மட்டன் கொத்து கறியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
 • பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
 • இது வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவு துருவி வைத்திருக்கும் தேங்காய், கசகசா மற்றும் முந்திரியைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 • பின்பு இந்த அரைத்த தேங்காயை கொதித்து கொண்டிருக்கும் கொத்து கறியில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
 • கொத்து கறி கிரேவியாக வேண்டும் என்றால் தண்ணீர் அதிகமாகவும் டிரை ஆக வேண்டும் என்றால் தண்ணீர் கம்மியாகும் சேர்க்கவும்.
 • 3 நிமிடத்திற்கு பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் கொத்து கறியில் ஒரு மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் ஒரு கையளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் கொத்து கறி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*