Home Tamil பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

0 comment
Published under: Tamil
பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை.

பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. இவை பாரம்பரிய செட்டி நாட்டு உணவு வகைகளில் தோன்றியவை. செட்டி நாடு மரபுப்படி திருமணம் முடிந்து உறவினர்கள் திருமண வீட்டில் ஒன்றாக கூடியிருக்கும் போது உறவினர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகார வகைகள் செய்து தருவது வழக்கம். அந்த வகையில் செய்து தரப்படும் பலகார வகைகளில் பால் பணியாரம் மற்றும் பால் கொழுக்கட்டை கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

Paal Kozhukattai (Milk Kozhukattai)

கொழுக்கட்டை வகைகளை சார்ந்த இவை தேங்காய் பால், பசும் பால், மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிறது. இதில் சேர்க்கும் தேங்காய் பால் வயிற்று புண்ணை, மற்றும் வாய் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

இப்பொழுது கீழே பால் கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Paal Kozhukattai (Milk Kozhukattai)
5 from 1 vote

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை.
Course: Dessert
Cuisine: South Indian, Tamil
Keyword: ganesh chaturthi

Ingredients

  • 1 கப் இடியாப்ப மாவு
  • 2 கப் தேங்காய் பால்
  • 1 கப் பசும் பால்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • சர்க்கரை தேவையான அளவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை ஏலக்காய் தூள்

Instructions

  • முதலில் ஒரு கப் இடியாப்ப மாவை ஒரு bowl ல் போட்டு அதோடு ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை, கால் கப் அளவு துருவிய தேங்காய், மற்றும் ஒரு சிட்டிகை உப்பை தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்பு இந்த கலக்கிய மாவில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதித்ததும் அதை சிறிது சிறிதாக ஒரு மேஜைக்கரண்டி மூலம் இந்த மாவில் சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • மாவு சிறிது ஆறிய பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தேங்காய் பால், அரை கப் அளவு பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவை போட்டு நன்கு கலக்கி சுட வைக்கவும்.
  • பால் கொதித்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டை உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டி மூலம் இந்த பாலில் சேர்த்து 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை அப்படியே வேக விடவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பொறுமையாக கிண்டவும்.
  • சர்க்கரை கரைந்ததும் அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பால் கொழுக்கட்டை தயார். இதை கட்டாயம் பண்டிகை காலங்களின் போது அல்லது விசேஷ நாட்களின் போது உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Paal Kozhukattai Recipe in English

 

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter

©2024 – All Right Reserved. Awesome Cuisine

Awesome Cuisine - Quick and Easy Recipes