Home Tamil பாப்கார்ன் சிக்கன்

பாப்கார்ன் சிக்கன்

0 comment
Published under: Tamil
பாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை

பாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை. குறிப்பாக இளைஞர்களை மிகவும் கவர்ந்த இந்த பாப்கார்ன் சிக்கன் 1992 ஆம் ஆண்டு அமெரிக்காவை சார்ந்த உணவு தொழில்நுட்ப வல்லுநர் Gene Gagliardi ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அமெரிக்காவில் உதயமான இவை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் இதனின் மொரு மொருப்பு தன்மை மற்றும் அதீத சுவையால் மிகவும் பிரபலம் அடைந்தது. இவை ஆசிய துணை கண்டத்தில் உள்ள தாய்வானில் Taiwanese பாப்கார்ன் சிக்கன் என்று அழைக்கிறார்கள். பாப்கார்ன் சிக்கனும் Taiwanese பாப்கார்ன் சிக்கனும் ஏறத்தாழ ஒரே பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி தான் செய்யப்படுகிறது. சீனாவில் பிரபலமான Five spice powder ஐ சேர்த்து பாப்கார்ன் சிக்கனை செய்கிறார்கள்.

Popcorn Chicken

இப்பொழுது கீழே பாப்கார்ன் சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.

Popcorn Chicken
5 from 1 vote

பாப்கார்ன் சிக்கன்

பாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை
Course: Appetizer, Snack
Cuisine: American, British, Indian
Keyword: popcorn chicken

Ingredients

  • 300 கிராம் போன்லெஸ் சிக்கன்
  • 3 முட்டை
  • 1 கப் தயிர்
  • 1 கப் மைதா மாவு
  • 1 கப் சோள மாவு
  • 1/2 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பூண்டு பல்
  • மிளகாய்த்தூள் தேவையான அளவு
  • மிளகு தூள் தேவையான அளவு
  • 1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் போன்லெஸ் சிக்கனை எடுத்து நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி, 3 பல் பூண்டு, மற்றும் அரை பெரிய வெங்காயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பில்டர் செய்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் தயிரை ஊற்றி அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.
  • பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு கலவையை அதில் ஊற்றி, தேவையான அளவு மிளகாய்த்தூள், மிளகு தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் இந்த கலவையில் வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு சிக்கன் துண்டுகள் மீது இந்த கலவை நன்கு படுமாறு கலக்கி சுமார் 3 மணி நேரம் அளவிற்கு ஊற வைக்கவும். (இதை முதல் நாள் இரவே செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.)
  • சிக்கன் துண்டுகள் ஊறுவதற்குல் ஒரு bowl ல் மைதா மாவு, சோள மாவு, தேவையான அளவு மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரக தூள்,ஒரு மேஜைக்கரண்டி மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • 3 மணி நேரத்திற்குப் பிறகு ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து இந்த மாவு கலவையில் போட்டு பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அனைத்து சிக்கன் துண்டுகளையும் இவ்வாறு செய்த பின் மீண்டும் ஒரு முறை இவ்வாறு சிக்கன் துண்டுகளை மாவில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் சிறிது சிறிதாக இந்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். (சிக்கன் துண்டுகளை மொத்தமாக போடக்கூடாது. பாத்திரத்தின் அளவிற்கேற்ப கம்மியாகவே சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள் நன்றாக பொரிந்து வரும்.)
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார் இதை ஒரு தட்டில் வைத்து ketch up ஓடு பரிமாறவும்.
  • இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Popcorn Chicken Recipe in English

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter

©2024 – All Right Reserved. Awesome Cuisine

Awesome Cuisine - Quick and Easy Recipes