Home Tamil முட்டை மஞ்சூரியன் கிரேவி

முட்டை மஞ்சூரியன் கிரேவி

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
சப்பாத்தி, நான், மற்றும் பிஃரைட் ரைஸ்க்கு முட்டை கிரேவி மஞ்சூரியன் ஒரு அசத்தலான சைடிஸ் தான் .

பொதுவாக சப்பாத்தி, நான், மற்றும் பிஃரைட் ரைஸ்க்கு சைடிஸ் ஆக சிக்கன் மஞ்சூரியன், கோபி மஞ்சுரியன் போன்ற டிஷ்களை நாம் உண்பது வழக்கம். ஆனால் இவற்றை தாண்டி முட்டை கிரேவி மஞ்சூரியன் எனும் ஒரு அசத்தலான சைடிஸ் தான். இவை செய்வதற்கும் மிகவும் எளிமையானவையும் கூட. இப்பொழுது கீழே முட்டை கிரேவி மஞ்சூரியன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

முட்டை மஞ்சூரியன் கிரேவி / Egg Manchurian Gravy

முட்டை மஞ்சூரியன் கிரேவி / Egg Manchurian Gravy

Egg Manchurian Gravy
3.50 from 6 votes

முட்டை மஞ்சூரியன் கிரேவி

சப்பாத்தி, நான், மற்றும் பிஃரைட் ரைஸ்க்கு முட்டை கிரேவி மஞ்சூரியன் ஒரு அசத்தலான சைடிஸ் தான் .
Course: Side Dish
Cuisine: South Indian
Keyword: egg gravy, manchurian

Ingredients

  • 5 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 குடை மிளகாய்
  • 1/4 கப் மைதா மாவு
  • 1/4 கப் சோள மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 மேஜைக்கரண்டி சிறிதாக நறுக்கிய பூண்டு
  • மிளகு தூள் தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் தேவையான அளவு
  • 2 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி கெட்சப்
  • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • வெங்காயத் தாள் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு bowl ல் முட்டைகளை உடைத்து ஊத்தி அதில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு கிண்ணத்தில் நன்றாக எண்ணை தடவி அடித்து வைத்துள்ள முட்டையை அதில் ஊற்றவும்.
  • அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து இந்த கிண்ணத்தை அதனுள் வைத்து மூடி போட்டு 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.
  • 20 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் முட்டை நன்றாக வெந்திருக்கும். இப்பொழுது இந்த வெந்த முட்டையை வேறொரு பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ மாத்தி துண்டுகளாக்கிக் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl ல் சோள மாவு, மைதா மாவு மற்றும் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் சிறிது அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.
  • அடுத்து வேக வைத்து வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை இதில் போட்டு நன்கு பிரட்டி அதை அப்படியே 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  • அதற்குள் ஒரு வடசட்டி மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் வடசட்டி இன் அளவிற்கேற்ப 2 அல்லது 3 முறையாக முட்டை துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (முட்டை துண்டுகளை நன்றாக வருத்து விடக்கூடாது. முட்டை துண்டுகள் மொறு மொறுப்பானதும் அதை எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும்.)
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் அதில் சிறிதாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து அதனின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அதில் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் சில்லி சாஸ், கெட்சப், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும். (கிரேவி மிகவும் ட்ரையாக இருந்தால் ஒரு மேஜைக்கரண்டி சோள மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கிரேவியுடன் சேர்த்து கொள்ளவும்.)
  • அடுத்து பொரித்து வைத்திருக்கும் முட்டை துண்டுகளை இந்த கிரேவியுடன் சேர்த்து நன்கு கிளறி சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • இரண்டு நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு வெங்காயத் தாள்களை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை கிரேவி மஞ்சூரியன் தயார்.
  • இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

You’ll Also Love:

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter

©2024 – All Right Reserved. Awesome Cuisine

Awesome Cuisine - Quick and Easy Recipes