Tamil

கோதுமை ஆப்பிள் அல்வா

0 comments

கோதுமை ஆப்பிள் அல்வா ஒரு சிறந்த குழந்தை உணவு.  ஆப்பிள் மற்றும் கோதுமைகளை உங்கள் குழந்தைக்கு தனித்தனியாக அறிமுகப்படுத்திய பிறகு, 8 மாதங்களில் இது குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

Wheat Apple Halwa (கோதுமை ஆப்பிள் அல்வா)

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் – இரண்டு (தோல் நீக்கி துருவி கொள்ளவும்)
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – பத்து நம்பர்
  • பால் – 35௦ மில்லி லிட்டர்
  • ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
  • கலர் பவுடர் – சிறிதளவு
  • சர்க்கரை – 1௦௦ கிராம்

செய்முறை

  1. கடாயில் நெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. பின், வறுத்த கோதுமை மாவை தண்ணீரில் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் பால், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து துருவிய ஆப்பிள் சேர்த்து கிளறவும்.
  5. பின், கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  6. சர்க்கரை சேர்த்து கிண்டவும். பிறகு, நெய், கலர் பவுடர் சேர்த்து கிளறவும்.
  7. இறுதியில், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கி விடவும்.

image via gkfooddiary

Subscribe to our Newsletter

Receive the latest recipes & kitchen tips !

Thanks for subscribing. Please check your mail and confirm the subscription.

Something went wrong.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*