414
ஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக்கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும். ஒரு சிறந்த புரதம் நிறைந்த உணவு.
தேவையான பொருட்கள்
- எள்ளு – இரண்டு டீஸ்பூன் (லேசாக வறுத்தது)
- வறுத்த வேர்க்கடலை – அரை கப்
- வறுத்த காய்ந்த மிளகாய் – மூன்று
- தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
- புளி – ஒரு சிறு துண்டு
- உப்பு – தேவைகேற்ப
- எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- கடுகு – கால் டீஸ்பூன்
- கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
- எள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.