ஒரு சுலபமான மற்றும் கவர்ச்சியான மலபார் டிஷ்.
image via youtube
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – அரை கப்
சிக்கன் – ஒரு கப் (சுத்தம் செய்தது)
எண்ணெய் – ஒரு குழிகரண்டி
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
சிக்கன், தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
பின், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்து வந்ததும் வேகவைத்த சிக்கன் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.
பின், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
இரண்டு நிமிடம் கழித்து கொதம்மல்லி தூவி இறக்கவும்.