Home Tamil குய்க் கார்ன் ரைஸ்

குய்க் கார்ன் ரைஸ்

Published under: Tamil

ஒரு சத்தான மற்றும் எளிதாக செய்ய கூடிய உணவு . அலுவலகம் அல்லது பள்ளி மதிய உணவு, மாலை டிபன்  அல்லது ஒரு எளிய இரவு உணவிற்கு சரியான டிஷ் .

Quick Corn Rice

Image via YouTube

தேவையான பொருட்கள்

சோளம் – அரை கப்

எண்ணெய் – இரண்டு ஸ்பூன்

நெய் – ஒரு ஸ்பூன்

வெண்காயம் – ஒன்று (நறுக்கியது)

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

பிரிஞ்சி இலை – ஒன்று

புதினா – ஒரு கைபுடி

கொத்தமல்லி – சிறிதளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன்

கரம்மசாலா – கால் ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

தேங்காய் பால் – ஒரு கப்

தண்ணீர் – ஒரு கப்

பாசுமதி அரிசி – ஒரு கப்

செய்முறை

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சிஇலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, சோளம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள் , கரம்மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.

தேங்காய் பால், தண்ணீர், பாசுமதி அரிசி சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

1 comment

Padmapriya June 21, 2017 - 8:03 pm

I tried some of recipes in this page. And all are good with taste.

Reply

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.